மதுரை மாநகராட்சி: கமிஷ்னருக்கு எதிரான செக்ஸ் புகார் தவறு
சென்னை:
மதுரை மாநகராட்சி கமிஷனர் ஹர்சஹாய்மீனா தன்னிடம் முறைகேடாக பேசியதாக பத்திரிகைகளில் வெளியான செய்தியைமதுரை மாநகராட்சியின் பெண் டாக்டர் மறுத்துள்ளார். அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறிது காலமாகவே மதுரை மாநகராட்சி செக்ஸ் புகாரில் சிக்கித் தவித்து வருகிறது. அங்குள்ள ரெக்கார்ட் ரூமில் அதிகாரிகளும் சிலபெண் ஊழியர்களும் கசமுசாவில் ஈடுபட்டு வருவதாகவும் விடுமுறை நாட்களில் அந்த ரூம் லாட்ஜாகவே மாறிவிடுவதாகவும்கூறப்பட்டு வருகிறது.
இது குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் மாநகராட்சி கமிஷ்னர் ஹர்சகாய் மீதும் செக்ஸ் புகார் எழுந்தது. அவர்மாநகராட்சியின் குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றி வரும் பெண் டாக்டர் ஒருவரிடம் தகாத முறையில் பேசியதாகபுகார் கூறப்பட்டது.
மேயல்- கமிஷ்னர் மோதல்:
ஆனால், மதுரை மாநகராட்சியின் மேயர் செ.ராமச்சந்திரன் தான் இந்தத் தவறான புகாரை கமிஷ்னர் மீது பரப்பி வருவதாககமிஷ்னர் ஆதரவு அதிகாரிகள் கூறி வருகின்றனர். திமுக மேயரான ராமச்சந்திரனுக்கு மதுரையில் பல தொழில்கள் உண்டு.
அரைபாடி லாரிகள், மணல் அள்ளுவது, செங்கல் சூளை என பலவிதமான தொழில்கள் நடத்தி வருபவர். இப்போதுமேயராகிவிட்ட நிலையில் தனது தொழிலை விஸ்தரிக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக புகார் கூறப்பட்டுவருகிறது.
ஆனால், இதற்கு நேர்மையான அதிகாரியான ஹர்சகாய் தடை போட்டு வருவதால் இருவருக்கும் இடையே அவ்வப்போதுமோதல் நடந்து வருவதாகவும் கமிஷ்னர் தரப்பினர் கூறுகின்றனர்.
கமிஷ்னரை ஒடுக்குவதற்காகத் தான் சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் அதிருப்தியையும் மீறி ஜெயலலிதாவை சந்தித்தார்ராமச்சந்திரன். மதுரை வளர்சிக்கு நிதி ஒதுக்க கோரி சந்தித்தாக அவர் கூறி வந்தாலும் அதிமுகவை நெருங்க சமயம் பார்த்துவருவதாகத் தெரிகிறது.
மேயரால் ஜோடிக்கப்பட்டதா?:
இந் நிலையில் தான் கமிஷ்னருக்கு எதிராக பெண் டாக்டர் விவகாரம் எழுந்தது. அப்போதே இது மேயரின் ஆட்களால்ஜோடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
சம்பந்தப்பட்ட அந்த பெண் டாக்டர் மேயர் மற்றும் கவுன்சிலர்களிடம் கமிஷ்னர் ஹர்சகாய்மீனா குறித்து அழுதவாறே புகார்கொடுத்ததாகவும் இந்தப் புகார் தொடர்பாக முதல்வர், ஆளுநருக்கு மேயர் கடிதம் எழுதியுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.
தேசிய கமிஷன் விசாரணை:
இதையடுத்து தேசிய பெண்கள் நல கமிஷனின் உறுப்பினர் சாந்தா ரெட்டி மதுரை வந்து விசாரணை மேற்கொண்டார். அப்போது,இதுபோல ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று சம்பந்தப்பட்ட பெண் டாக்டர் எழுதியே தந்துள்ளார்.
மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு குடும்ப கட்டுப்பாடு திட்டம் தொடர்பான சில பொதுவான கேள்விகளை மட்டுமேகமிஷனர் என்னிடம் கேட்டார். இதையடுத்து மேயர் தலைமையிம் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் குறித்து ஒரு கூட்டம்நடந்தது.
அந்தக் கூட்டத்தில், கமிஷனரும் இந்தத் திட்டம் குறித்து விளக்கம் கேட்டதாகத் தெரிவித்தேன். ஆனால், அதை சிலர் திரித்துவேறுமாதிரியாக பத்திரிகைகளுக்கு செய்தியாக கொடுத்துள்ளனர் என அந்த பெண் டாக்டர் கூறியுள்ளார்.
இதை செய்தியாளர்களிடம் தெரிவித்த சாந்தா ரெட்டி, பெண்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது நன்கு யோசித்து,உண்மை என்னவோ அதை வெளியிட வேண்டும் என்றார்.
எப்படியோ மதுரை மாநகராட்சியில் முறைகேடுகளுக்கு இடம் தராமல் கட்டுப்படுத்தி வரும் ஒரு நல்ல அதிகாரிதவறான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பியிருக்கிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications