அதிகாரம் இல்லாத மேயர் பதவி தேவையில்லை: ஸ்டாலின்
சென்னை:
மேயர் கவுனை மாட்டிக் கொண்டு கவுன்சில் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவதற்கு மட்டுமே மேயர் பதவிஎன்றால் அப்பதவி தனக்குத் தேவையில்லை என்று சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ராமமோகன் ராவ் ஒப்புதல் அளித்துள்ளார்.இதையடுத்து ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் விரைவில் மேயர் பதவியையே துறக்கவுள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நடந்தஒரு திருமண விழாவின் போது அவர் பேசுகையில்,
வெறும் கருப்பு கவுனை மாட்டிக் காண்டு கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவதற்கு மட்டுமே மேயர் பதவிஎன்றால் அது எனக்குத் தேவையில்லை. அதிகாரமே இல்லாத மேயர் பதவியை வகித்து என்ன பயன்?
இதுவரை சென்னை மாநகராட்சிக்கு 43 மேயர்கள் இருந்துள்ளனர். நான் 44வது மேயராகத் தேர்வுசெய்யப்பட்டபோது மக்களால் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெயரைப் பெற்றேன்.
இரண்டாவது முறை கடந்த ஆண்டு அக்டோபரில் போட்டியிட்ட போது நிச்சயம் நான் வெற்றி பெற்று விடுவேன்என்பதை அறிந்த ஆளுங்கட்சியினர் வரலாறு காணாத வன்முறையில் இறங்கி என்னைத் தோற்கடிக்க முயன்றனர்.
ஆனால் அவர்களது தில்லுமுல்லுகளையும் மீறி நான் வெற்றி பெற்றேன். அன்று முதலே என்னைஅவமானப்படுத்தும் வேலைகளில் ஈடுபடத் தொடங்கினர் ஆளும் அதிமுகவினர்.
அதன் கடைசி முயற்சியாகவே என்னுடைய பதவியைப் பறிக்க சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். பழி வாங்கும்சட்டம் இல்லை என்று அவர்கள் கூறினால் தேர்தலுக்கு முன்பே கொண்டு வந்திருக்க வேண்டும். அல்லது அடுத்ததேர்தலுக்கு முன்பாகக் கொண்டு வந்திருக்க வேண்டும்.
மேயருக்குரிய அதிகாரங்கள் அனைத்தும் மாநகராட்சி கமிஷனருக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்படியென்றால்மேயர் பதவி எதற்கு? முதல்வரின் அதிகாரங்கள் அனைத்தையும் தலைமை செயலாளருக்குக் கொடுத்து விட்டால்முதல்வர் பதவி எதற்கு என்பது போலத் தான் இதுவும் உள்ளது.
எனது மேயர் பதவியை ராஜினாமா செய்வதா, இல்லையா, அரசின் சட்டம் குறித்து சட்டரீதியான நடவடிக்கைஎடுக்கப்படுமா, இல்லையா என்பது குறித்து திமுக தலைமை தான் முடிவு செய்யும் என்றார் ஸ்டாலின்.
-
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications