ஸ்ரீநகரில் மிக் போர் விமானத்தில் தீ பிடித்தது
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் இந்திய விமானப் படையின் மிக் ரக போர் விமானத்தில் தீ பிடித்துக் கொண்டது. இதையடுத்து விமானிஉடனடியாக வெளியே குதித்து உயிர் தப்பினார்.
ஸ்ரீநகர் விமான நிலையத்தின் ரன் வேயில் இந்த விபத்து நடந்தது. பகல் 12.25 மணிக்கு வழக்கமான பயிற்சியில்ஈடுபடுவதற்காக மிக் விமானத்தை விமானி ஸ்டார்ட் செய்தார். பறக்கத் தயாரானபோது என்ஜினில் தீ பிடித்தது.
உடனே இந்தத் தீ வேகமாக விமானம் முழுவதும் பரவியது. பறப்பதற்காக தன்னை சீட்டுடன் சேர்த்துபிணைத்திருந்த விமானி உடனடியாக தன்னை விடுவித்துக் கொண்டு கொண்டு வெளியே குதித்துவிட்டார்.இதனால் அவர் உயிர் தப்பினார்.
முதலில் இந்த விமானம் பறக்கும்போது தரையில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் வந்தன. இதையடுத்துஉண்மை நிலையை விமானப் படை விளக்கியுள்ளது.
மிக் விமானங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளனதால் அவை பறக்க மத்திய அரசு தடை விதித்தது. அனைத்து மிக்விமானங்களையும் தரையிறக்குமாறு அரசு உத்தரவிட்டது.
இந் நிலையில் தான் எல்லையில் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து அனைத்து மிக் விமானங்களும் மீண்டும்இயக்கப்பட்டன. இந் நிலையில் மீண்டும் மிக் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தையடுத்து ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பிற பயணிகள் விமானங்களை இயக்குவதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது. ரன்வேயில் இந்த விபத்து நடந்ததால் விமானங்களை இயக்க இயலவில்லை. இதைத் தொடர்ந்துஜெட் ஏர்வேஸ் தனது விமானங்களை ரத்து செய்துவிட்டது.
பிரஜைகளை அழைக்கும் ஜப்பான்:
இந் நிலையில் எல்லையில் போர் மேகங்கள் சூழ்நிதிருப்பதால் ஜப்பான் தனது நாட்டினரை உடனே இந்தியா,பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பி விடுமாறு கூறியுள்ளது.
பாக் தாக்குதலில் மூவர் பலி:
இதற்கிடையே எல்லையில் பாகிஸ்தான் படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதலில் காஷ்மீர் கிராமங்களைச் சேர்ந்த 3பேர் இறந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். இதற்கு இந்தியப் படைகள் பதில் பீரங்கித் தாக்குதலில்ஈடுபட்டுள்ளன.
அமெரிக்க அமைச்சர் வருகை ஒத்திவைப்பு:
இந் நிலையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பீல்ட் இந்தியா வருவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இப்போது ஐரோபபாவில் உள்ள அவர் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் வழியாக இந்தியா வர இருந்தார். ஆனால்,இப்போது அடுத்த வாரம் தான் இந்தியா, பாகிஸ்தானுக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த அவர் வருகிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications