அமெரிக்க யோசனை: இந்தியா நிராகரிப்பு
டெல்லி:
இந்திய- பாகிஸ்தான் இடையே பதற்றத்தைத் தணிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட்ஆர்மிடேஜ் இன்று இந்தியா வந்தார். நேற்று அவர் பாகிஸ்தானில் அந் நாட்டு ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ்முஷாரபுடன் பேச்சு நடத்தினார்.
இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கை சந்தித்துப் பேசிய ஆர்மிடேஜ் எல்லையிலஅமெரிக்க-பிரிட்டன் படைகளைக் கொண்டு கண்காணிப்பில் ஈடுபடும் யோசனையைத் தெரிவித்ததாகக்தெரிகிறது.
ஆனால், இதை ஏற்க முடியாது என ஜஸ்வந்த் சிங் கூறிவிட்டார். எல்லையில் பாகிஸ்தானும் இந்தியாவும் இணைந்துகண்காணிப்பில் ஈடுபடலாம் என பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார். அது தான் இந்தியாவின் இறுதி முடிவு.
எங்கள் எல்லையில் மூன்றாவது நாட்டை அனுமதிக்க முடியாது என்று ஆர்மிடேஜிடம் ஜஸ்வந்த் சிங் கூறிவிட்டார்.
நேற்று பாகிஸ்தானில் இருந்து ஆர்மிடேஜ், தீவிரவாதிகள் எல்லை தாண்டிச் செல்வதைத் தடுக்குமாறு முஷாரபிடம்கூறினார்.
இன்று டெல்லியில் பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ்மிஸ்ரா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் சந்தித்துப் பேசுகிறார் ஆர்மிடேஜ்.
காஷ்மீர் எல்லையில் கூட்டுப் படை:
இதற்கிடையே காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க அமெரிக்க- பிரிட்டன் கூட்டுப்படைகளை நிறுத்தும் யோசனையை பிரிட்டன் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்த யோசனையை அமெரிக்கா முதலில் தெரிவித்தது. இந்த யோசனையை இந்தியா ஏற்க மறுத்துவிடடதுகுறிப்பிடத்தக்கது.
பிரஜைகளை அழைக்கிறது போர்சுகல்:
இதற்கிடையே இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் தனது பிரஜைகள் உடனே நாடு திரும்புமாறு போர்சுகல்நாடு உத்தரவிட்டுள்ளது. போர் அபாயம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந் நாடுதெரிவித்துள்ளது.
புஷ்-புடின் பேச்சு:
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் ஏற்படுவதைத் தவிர்ப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும் ரஷ்யஅதிபர் விளாடிமிர் புடனும் நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர்.
பாக். அமைச்சர் ராஜினாமா:
இந் நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் தனது பதவியை ராஜினாமாசெய்துவிட்டார். உடல் நிலை காரணமாக பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக அவர் இன்று அறிவித்தார்.
நேற்றே இது தொடர்பா செய்திகள் வெளியாகின. இன்று அது உறுதியாகிவிட்டது.
இதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு 4 பேரின் பெயர்கள் அடிபடுகின்றன. முன்னாள்வெளியுறவுத்துறை செயலாளர்கள் நிஜாமுதீன் ஷேக், ஷேக்யார் கான், ஐ.நாவுக்கான பாக் தூதர் மெலீனா லோதி,இப்போதைய வெளியுறவுச் யெலாளர் இனாமுல் ஹக் ஆகியோரில் ஒருவர் இந்தப் பதவிக்கு வரலாம் என்றுதெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications