4 மணி அவகாசத்தில் தாக்கத் தயார்: இந்திய கடற்படை
டெஹ்ராடூன்:
உத்தரவு தரப்பட்ட 4 மணி நேரத்தில் பாகிஸ்தானைத் தாக்க தயாராக இருப்பதாக இந்திய கடற்படைதெரிவித்துள்ளது.
கடற்படையின் தலைவர் தலைமை அட்மிரல் மாதவேந்திர சிங் இதனைத் தெரிவித்தார்.
டெஹ்ராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடெமியில் பேசிய சிங் கூறுகையில்,
முப்படைகளும் மிகவும் தயார் நிலையில் உள்ளன. கடற்படையைப் பொறுத்த வரை 4 மணி நேர அவகாசம்கொடுத்தால் போதும், தாக்கத் தயார். போர் மூண்டால் பாகிதானின் தெற்குப் பகுதியை இந்திய கடற்படை நிலைகுலையச் செய்யும்.
கடற்பகுதியில் உள்ள இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோலிய பைப்-லைன்கள் ஆகியவைதொடர்ந்து கடற்படையின் கண்காணிப்பில் உள்ளன.
பாகிஸ்தானின் நீர்மூழ்கிகளின் திறனை நாம் கணக்கில் எடுத்தாக வேண்டும். அந்த நீர்மூழ்கிகளின் தாக்குதலைசமாளிக்க இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கையும் திறனும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல கப்பல்கள் அரபிக் கடலுக்கு அனுப்பப்பட்டுவிட்டன. தேவைப்பட்டால் மேலும் கப்பல்கள் அங்குசெல்லும். ரஷ்யாவிடம் இருந்து விமானம் தாங்கிக் கப்பல் வாங்க பேச்சு நடந்து வருகிறது என்றார்.
இந்தியாவின் அணு சக்தியால் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்கள் அரபிக் கடல் பகுதியில் உள்ளனவா என்றகேள்விக்கு பதிலளிக்க சிங் மறுத்துவிட்டார்.
பதற்றம் குறையவில்லை: அமெரிக்கா
இதற்கிடையே இந்தியா வரவுள்ள அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பீல்ட் இந்தியா-பாகிஸ்தான்இடையே பதற்றம் குறையவில்லை என்று கூறியுள்ளார்.
இப்போது எஸ்டோனியாவில் நேட்டோ நாடுகளின் பாதுகாப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அவர் அடுத்தவாரம் புதன்கிழமை இஸ்லாமாபாத் மற்றும் டெல்லி வருகிறார்.
பதற்றம் குறைகிறது: பாகிஸ்தான்
இதற்கிடையே சர்வதேச நாடுகளின் முயற்சியால் எல்லைப் பகுதியில் பதற்றம் சிறிதளவு குறைந்துள்ளதாகபாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால், முழு அளவில் பதற்றம் குறைய வேண்டுமானால் இந்தியா தனது படைகளைஎல்லையில் இருந்து வாபஸ் வாங்க வேண்டும் என பாகிஸ்தான் கூறியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications