பாக். மீது பறந்த இந்திய உளவு விமானம் வீழ்த்தப்பட்டது
இஸ்லாமாபாத்:
இந்தியாவின் ஆளில்லா உளவு விமானத்தை தனது நாட்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான்கூறியுள்ளது.
நேற்று இரவு 11 மணியளவில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாவட்டத்தின் மீது இந்த விமானம் பறந்ததாகவும் அதைபாகிஸ்தான் போர் விமானங்கள் விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தியதாகவும் பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் ரஷீத் குரேஷி கூறினார்.
சுடப்பட்ட இந்த விமானியில்லாமல் இயங்கும் விமானம் டோக்ரான் என்ற இடத்தில் தரையில் விழுந்துநொறுங்கியதாவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
பாகிஸ்தானுக்குள் 21 கி.மீ. வரை அந்த விமானம் ஊடுருவி உளவு பார்த்ததாகவும், இதன்மூலம் இந்தியா தங்கள்நாட்டில் ஊடுருவியுள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
பாகிஸ்தான் வான் பரப்பில் இந்த விமானம் நுழைந்தவுடன் ரேடார்கள் அதைக் கண்டுபிடித்ததாகவும் இதையடுத்துபோர் விமானங்கள் அதை விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தியதாக கூறுகிறது பாகிஸ்தான்.
ஒரு கரும்பு தோட்டத்தில் அந்த விமானம விழுந்து தீப் பிடித்தது. அந்த இடத்தை ராணுவம் உடனடியாக சுற்றிவளைத்தது. அந்த விமானம் விழுந்த இடத்திலிருந்து ஒரு கேமராவும் பிடிபட்டதாக ராணுவம் கூறியது.
இது டுரோன் ரகத்தைச் சேர்ந்த உளவு விமானம் என அந் நாடு கூறியுள்ளது.
இந்த உளவு விமானங்கள் பறக்கும்போதே அந்தப் பகுதிகளை படம்பிடித்து தரைக்கட்டுப்பாட்டுக்கு அனுப்பிவிடும் திறன் உடையவை. இதனால் எதிரியால் சுடப்பட்டாலும் உளவு பார்த்தது, பார்த்தது தான்.
இந்தியா ஒப்புக் கொண்டது:
தனது உளவு விமானம் பாகிஸ்தான் வானில் பறந்த போது காணாமல் போனதாக இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.லாகூர் மீது பறந்தபோது இந்த விமானத்துடனான தொடர்பு அறுந்தாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இதுபோன்ற போர்க் கால சூழ்நிலையில் உளவு விமானங்களை இயக்குவது ஒன்றும் புதிதல்ல எனவும் இந்தியாகூறியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications