காஷ்மீர்: தீவிரவாத ஆதரவு முக்கியத் தலைவர் கைது
ஸ்ரீநகர்:
பிரிவினைவாதத் தலைவரும், ஹூரியத் அமைப்பின் மூத்த தலைவருமான சையத் அலு ஷா ஜீலானி கைதுசெய்யப்பட்டார்.
காஷ்மீரை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று போராடி வருகிறது ஹூரியத் மாநாட்டு அமைப்பு. இந்தஅமைப்பில் தீவிரவாதத்தையும் பாகிஸ்தானையும் ஆதரிக்கும் கட்சிகளும் உள்ளன. அதே நேரத்தில் பிரச்சனையைபேசித் தீர்க்க வேண்டும் என்று கோரும் தலைவர்களும் இதில் உள்ளனர்.
இந்த அமைப்புடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில்பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டும் என ஹூரியத் அமைப்பு கோருகிறது. இதை இந்தியா ஏற்க மறுத்திவிட்டது.
பிரிவினைவாத அமைப்பாக இருந்தாலும் காஷ்மீரின் பல கட்சிகளை உள்ளடக்கி இருப்பதால் இந்த அமைப்பைமத்திய அரசு தடை செய்யவில்லை. தொடர்ந்து சுந்திரமாக இயங்க அனுமதி தரப்பட்டுள்ளது.
இந்த அமைப்பைச் சேர்ந்த மிதவாதத் தலைவரான அப்துல் கனி லோன் சமீபத்தில் காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்டார். தீவிரவாத்தை அவர் எதிர்த்ததால் பலியானார்.
இப்போது கைது செய்யப்பட்டுள்ள ஜீலானி தீவிரவாதத்தை ஆதரிக்கும் தலைவராவார். இதனால் ஜீலானியை தனதுவாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்தார் அப்துல் கனி லோன்.
ஜமாத்-ஏ-இஸ்லாமி என்ற கட்சியை நடத்தி வரும் ஜீலானி, ஹூரியத் அமைப்பில் உள்ள பாகிஸ்தான்ஆதரவாளர்களுக்கு தலைவராக இருந்து வருகிறார். இவருக்கு பாகிஸ்தானும் பல வகைகளில் உதவி வருகிறது.
இவருக்கு தீவிரவாத அமைப்புகள் மூலமாக பாகிஸ்தான் ஏராளமான பணமும் கொடுத்து வருகிறது. இதைஇந்தியா இதுவரை கண்டும்காணாமல் இருந்து வந்தது.
ஆனால், இப்போது பாகிஸ்தானை தாக்கத் தயாராகிவிட்ட இந்தியா அந் நாட்டு ஆதரவுத் தலைவர்களையும் சுற்றிவளைக்க தொடங்கியுள்ளது. இதன் ஆரம்பமாகத் தான் ஜீலானி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தீவிரவாதஅமைப்பு சட்டமான போடோ சட்டத்தின் கீழ் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். இவரது மருமகனும் கைதுசெய்யப்பட்டார்.
முன்னதாக அவருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், அமைப்புகளில் போலீசாரும் வருமானவரித்துறையினரும் சோதனை நடத்தினர். தீவிரவாதிகள் மூலம் இவருக்கு பணம் வந்தது குறித்து பல ஆவணங்கள்இதில் சிக்கின.
துக்ரான்-ஏ-மிலத் என்ற அமைப்பை நடத்தி வரும் பெண் தீவிரவாதியான ஆயிஷா இந்திரா பீ மீதும் போடோவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது அலுவலகமும் சோதனையிடப்பட்டது. ஆனால், அவர் போலீசாரிடம்சிக்கவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார். இவருக்கு சொந்தமான கடைகளிலும் ரெய்ட் நடக்கிறது.
ஸ்ரீநகரில் கைது செய்யப்பட்ட ஜீலானி சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் ஜார்க்கண்ட் மாநிலம் கொண்டு போகப்பட்டுராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இன்று அதிகாலை 5 மணிக்கு இந்த ரெய்ட் ஆரம்பித்தது. ஜீலானியில் வீட்டிலிருந்து மட்டும் ரூ. 10.25 லட்சம்பணம், 10,000 அமெரிக்க டாலர்கள், ஏராளமான நகைகள், சொத்துப் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆனால், இவரது வருமானம் மாதமொன்றுக்கு ரூ. 17,000 தான். இவரது வீட்டில் 14 வேலைக்காரர்கள் உள்ளனர்.இவர்களுக்கு மாத ஊதியமாக மட்டும் ரூ. 28,000 தரப்பட்டுள்ளது. ஜீலானி குடும்பத்தின் மாதச் செலவு ரூ. 1.5லட்சம். இதற்கு எங்கிருந்த பணம் வந்தது என்பதை அவரால் விளக்க முடியவில்லை என வருமானவரித்துறையினர்தெரிவித்தனர்.
ஜீலானியின் பல வங்கிக் கணக்குகளும் சோதனையிடப்படவுள்ளன.
சமீபத்தில் பாகிஸ்தான பத்திரிக்கையாளர்கள் இருவர் ஹிஸபுல் முஜாகிதீன் அமைப்பின் தலைவரிடம் பேட்டிகண்டனர். அப்போது அவர் ஜீலானிக்கு பணம் அனுப்பி வருவதைத் தெரிவித்தார். இதையடுத்து ஜீலானி மீதுவிசாரணையை இந்தியா தொடங்கியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications