அடுத்த ஜனாதிபதி யார்?: நாயுடு கையில் முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் கே.ஆர்.நாராயணனே போட்டியிட வேண்டும் என காங்கிரஸ்வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரை நேரில் சந்தித்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்வலியுறுத்தினர்.

நாராயணனை மீண்டும் ஜனாதிபதியாக்க பிரதமர் வாஜ்பாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர ஆளுநர்பி.சி.அலெக்சாண்டரை ஜனாதிபதியாக்க வாஜ்பாய் முயன்று வருகிறார்.

ஆனால், அவர் கிருஸ்தவர் என்பதால் அவரை நிறுத்த வாஜ்பாய் முயல்வதாகவும், இதன்மூலம் எதிர்காலத்தில்காங்கிரஸ் வென்றாலும் சோனியா பிரதமர் ஆக முடியாமல் தடுக்க பா.ஜ.க. திட்டமிடுவதாகவும் காங்கிரஸ்கருதுகிறது.

காங்கிரஸ் வெல்லும்பட்சத்தில், ஜனாதிபதியும் கிருஸ்தவர், பிரதமரும் (சோனியா) கிருஸ்தவரா என்ற கேள்வியைஎழுப்பி சோனியாவுக்கு இடைஞ்சலை விளைவிக்க சங் பரிவார் அமைப்புகளான வி.எச்.பி, பஜ்ரங் தள்,ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கருதுகிறது. சங் பரிவாரின் இந்த யோசனையை பா.ஜ.க.அமலாக்க முயல்வதாகவும் கூறப்படுகிறது.

நாயுடு-காங்கிரஸ் எதிர்ப்பு:

இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தாலும் அலெக்சாண்டரை எதிர்த்து வருகிறார் தெலுங்குதேசத் தலைவர் நாயுடு. அவர் தனது மாநிலத்தைச் சேர்ந்த துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்தை ஜனாதிபாக்கவேண்டும் என்கிறார்.

நாயுடுவின் ஓட்டு இல்லாமல் காங்கிரசும் வெல்ல முடியாது, பா.ஜ.கவும் வெல்ல முடியாது. இதனால், நாயுடுபக்கமாக சாய்ந்து அலெக்சாண்டரை ஜனாதிபதியாகாமல் தடுக்க காங்கிரஸ் முயன்று வருகிறது.

ஆனால், அலெக்சாண்டரையே ஜனாதிபதியாக்குவது என்ற முடிவில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. இதையடுத்துநேற்று தனது டெல்லி பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்து தேசிய ஜனநாயக் கூட்டணிக் கூட்டத்தையேகாலவரையின்றி ஒத்தி வைக்கச் செய்து பா.ஜ.கவுக்கு அதிர்ச்சி தந்தார் நாயுடு.

வாஜ்பாய் யாரை வேண்டுமானலும் முடிவு செய்யலாம் என்று நாயுடு கூறியிருப்பதாக பா.ஜ.க. கூறியுள்ளது.ஆனால், இதில் உண்மையில்லை என்று தெரிகிறது.

கிருஷ்ணகாந்தைத் தான் ஜனாதிபதியாக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார் நாயுடு. இதனால், அவரைசமாதானப்படுத்த பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான பிரமோத் மகாஜன் இன்றுஹைதராபாத் விரைந்தார்.

ஆந்திர மாநிலத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி போன்ற அறிவிப்புகளைத் தந்து அவரை சமாதானப்படுத்தும்முயற்சிகளில் பிரமோத் மகாஜன் இறங்கினார். ஆனால், அலெக்சாண்டரை ஏற்க நாயுடு ஒப்புக் கொண்டாரா என்றுதெரியவில்லை.

வாஜ்பாய் தொலைபேசியில் பேச்சு:

ஆனால், இன்றே டெல்லிக்கு வர நாயுடு ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நாளை தேசியஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடக்கும் என்றும் தெரிகிறது. நாயுடுவுடன் பிரதமர் வாஜ்பாயும்தொலைபேசியில் இன்றும் பேசினார்.

நாயுடுவை ஒருவேளை பா.ஜ.க. சமாதானப்படுத்திவிட்டால் தங்கள் கதி அதோ கதி என்பதால், காங்கிரசும்நேரடியாக ஆக்ஷனில் இறங்கியுள்ளது.

இதுவரை யாருக்கு ஆதரவு என்பதில் வெளிப்படையாக பேசாமல் இருந்து வந்த காங்கிரஸ் நேற்றுகே.ஆர்.நாராயணனைச் சந்தித்து மீண்டும் போட்டியிடுமாறு வலியுறுத்தியது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரானமன்மோகன் சிங் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் அவரைச் சந்தித்துவலியுறுத்தினர்.

ஆனால், எல்லோரும் சேர்ந்து தேர்ந்தெடுத்தால் சரி.. இல்லாவிட்டால் போட்டியிட மாட்டேன் என்று கூறி வருகிறார்நாராயணன்.

நேற்று காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை.

முதலில் அலெக்சாண்டர் என்று கூறிய பா.ஜ.க., எதிர்க் கட்சிகளான எதிர்ப்பால் கிருஷ்ணகாந்த் பெயரைமுன்மொழிந்தது. ஆனால், எதிர்க் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததால் நாம் நிறுத்தும் நபர் தான் ஜெயிப்பார்என்ற நம்பிக்கைக்கு வந்த பா.ஜ.க. அலெக்சாண்டரை மீண்டும் முன் மொழிந்தது.

ஆனால், திடீரென எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து கொண்டது பா.ஜ.கவுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது.அவர்களுடன் நாயுடுவும் சேர்ந்து கொண்டால் கிருஷ்ணகாந்த் ஜனாதிபதியாவதை வாஜ்பாயே நினைத்தாலும்தடுக்க முடியாது.

இதனால் இப்போது நாயுடுவை எப்படியாவது வளைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. அவரை மடக்கிஅலெக்சாண்டரை ஏற்க வைப்பது அல்லது கிருஷ்ணகாந்த் பெயரை நாமாகவே முன் மொழிந்து நாமேஉருவாக்கிய சிக்கலில் இருந்து தப்பிவிடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளது பா.ஜ.க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+