தமிழக அமைச்சர்கள் இலாகா திடீர் மாற்றம்: பொன்னையனுக்கு நோஸ்-- கட்
சென்னை:
நிதியமைச்சர் பொன்னையன் வசம் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறையை முதல்வர் ஜெயலலிதா பறித்துள்ளார்.அதே போல வேலுச்சாமியிடம் இருந்த தொழில்துறையும் பறிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் போக்குவரத்து அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கு கூடுதலாக தொழில்துறையும்வழங்கப்பட்டுள்ளது.
பொன்னையனிடம் இருந்து பறிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துறை (Information technology) சட்ட அமைச்சர்டி.ஜெயக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதனால் வேலுச்சாமி இனி வணிகவரித்துறை அமைச்சராக மட்டும் இருப்பார்.
இன்று காலை முதல்வர் ஜெயலலிதா ஆளுநர் ராம்மோகன் ராவை கவர்னர் மாளிகையில் சென்று சந்தித்தார்.
அப்போதே கோட்டையில் இருந்த அமைச்சர்கள் இடையே உதறல் ஆரம்பித்துவிட்டது (இதை தட்ஸ்தமிழ்பிற்பகலிலேயே வெளியிட்டது.).
சுமார் 15 நிமிடங்கள் ஆளுநரைச் சந்தித்த ஜெயலலிதா அவரிடம் அமைச்சர்களின் இலாகா மாற்றம் குறித்துபேசினார். பின்னர் புதிய தலைமைச் செயலாளராக சுகவனேஸ்வர் நியமிக்கப்பட்டதையும், ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் அதிரடி மாற்றம் குறித்தும் விவாதித்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் ஸ்டாலின் பதவியைப் பறிக்கும் ஒரு நபர்-ஒரு பதவிசட்டம், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தடை செய்யும் சட்டம் ஆகியவற்றுக்கு ஆளுநர் எந்தவித எதிர்ப்பும்இன்றி ஒப்புதல் அளித்தார். இதற்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல்களில் பொன்னையன் வாணியம்பாடி தொகுதியின் பொறுப்பாளராகநியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த வேலையை அவர் சரியாக செய்யவிலை என்றஅதிருப்தியில் ஜெயலலிதா இருந்தார்.
இதையடுத்து அவருக்கு இந்த நோஸ்-கட் தரப்பட்டுள்ளது.
அதே போல நயினார் நாகேந்திரனும் ஜெயலலிதாவின் அதிருப்தி லிஸ்டில் தான் இருக்கிறார். ஆனால், இவர்சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர் மீது நடவடிக்கைக்கு பதிலாக பரிசு தான் கிடைத்துள்ளது.
முதலில் மின்துறை அமைச்சராக இருந்த இவர், பின்னர் போக்குவரத்து அமைச்சரானார். இப்போது அவரிடம்கூடுதலாக தொழில்துறையும் தரப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜெயலலிதாவிடம் சசிகலாவின் செல்வாக்கு மீண்டும்நிரூபிக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications