52 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் அதிரடி மாற்றம்: புதிய தலைமை செயலாளர் நியமனம்
சென்னை:
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாலராக சுகவனேஸ்வர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர 52 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்போதைய தலைமைச் செயலாளர் சங்கர் நீண்ட விடுப்பில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில காலமாகவே சங்கர் அதிருப்தியில் இருந்தார். தன்னை வி.ஆர்.எஸ்சில் செல்ல அனுமதிக்குமாறுமுதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டிருந்தார்.
சசிகலாவிடம் செல்வாக்கு பெற்ற சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கோஷ்டி சேர்ந்து கொண்டு அவரை கேவலப்படுத்திவருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
தன்னைவிட கீழே உள்ள அதிகாரிகள் ஜாதிரீதியாக பலத்தைக் காட்டி வருவதை பொறுக்க முடியாத சங்கர்பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் இருந்தார்.
கோட்டையில் முதல்வரை சந்திக்கக் கூட விடாமல் தலைமைச் செயலாளர் சங்கரையே தடுத்து காக்கவைத்துள்ளனர். இதனால் பதவி விலகிவிடும் மூடுக்கு வந்தார் சங்கர்.
இந் நிலையில் சங்கர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய தலைமைச் செயலாளராகசுகவனேஸ்வர் நியமிக்கப்பட்டுள்ளார். சுகவனஸ்ேவர் இப்போது வருவாய் நிர்வாக ஆணையாளராக உள்ளார்.
இவர் தவிர 52 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளின் செயல்பாட்டில்ஜெயலலிதா கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். சர்க்கஸ் ரிங் மாஸ்டர் மாதிரி அதிகாரிகளை சாட்டையால் அடித்துதான் வேலை வாங்க வேண்டியுள்ளது என்று சட்டமன்றத்திலேயே கூறினார் ஜெயலலிதா.
இதனால் எரிச்சலடைந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்கள் ஒத்துழைப்பை முழு அளவில் நிறுத்திக் கொண்டனர்.இதைத் தொடர்ந்து அதிகாரிகளை பந்தாடியுள்ளார் ஜெயலலிதா.
சங்கர் தலைமைச் செயலாளர் ஆவதற்கு முன் டெல்லியில் மத்திய தரைவழிப் போக்குவரத்துறைச் செயலாளராகஇருந்தவர். மிகச் சிறந்த நிர்வாகி என்ற பெயர் பெற்ற இவரை ஜெயலலிதா தான் தமிழத்துக்கு அழைத்து வந்தார்.
ரப்பர் ஸ்டாம்ப் பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது நிர்வாகத்தை திறம்பட நடத்தியவர் சங்கர்.
இப்போது தானாகவே வெளியே போய்விடும் நிலைக்கு மனப் புழுக்கத்துடன் நிர்வாகத்தைவிட்டுவெளியேறியிருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications