பன்னீர் செல்வம் ஒரு காமெடியன்: கருணாநிதி கிண்டல்
சென்னை:
"மனோகரா" படத்தில் வரும் வசந்தன் கேரக்டர் போல அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிதற்றி வருகிறார் என்று திமுக தலைவர் கருணாநிதிகிண்டல் செய்துள்ளார்.
இடைத் தேர்தலில் தோற்ற கருணாநிதி அரசியலை விட்டு விலக வேண்டும் என்று சமீபத்தில் அமைச்சர் பன்னீர் செல்வம் கூறியிருந்தார்.அதற்கு கருணாநிதி பதில் அளித்துள்ளார். தனது பதிலில் ஓ.பன்னீர் செல்வத்தை, மனோகரா படத்தில் வரும் காமெடி கேரக்டரானவசந்தனுடன் ஒப்பிட்டுள்ளார்.
கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
தேர்தல் கமிஷன் மீது புகார் கூறும் கருணாநிதி, பின் ஏன் மத்திய அமைச்சரவையில் நீடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் பன்னீர்செல்வம்.இதிலிருந்து என்ன புரிகிறது என்றால், தேர்தல் கமிஷனும், மத்திய அரசும் ஒன்று என்று இந்தவசந்தனிடம் யாரோ சிலர் கூறியிருக்கிறார்கள்போல. அதை நம்பிய நமது வசந்தனும், என்னை ராஜினாமா செய்யச் சொல்கிறார்.
மனோகராவில் விகடனும், வைத்தியரும் சேர்ந்து வசந்தனைக் கேலி செய்து பேசுவார்கள். அதுபோல, ஓ.பன்னீர் செல்வத்தையும்வசந்தனாக நினைத்து விட்ட அக்கட்சியில் சிலர் இப்படி தவறான தகவல் கூறியுள்ளார்கள் போலும். அதைக் கேட்டு வசந்தனும்பிதற்றியிருக்கிறார். தேர்தல் கமிஷனும், மத்திய அரசும் வேறு வேறு என்பது அவருக்குத் தெரியவில்லை, பாவம்.
அரசியலை விட்டு ஓடிப் போக வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். யாரைப் பார்த்து தெரியுமா? பல் முளைத்த நாள் முதல்பெரியாரின் பாசறையில் பயின்று, அண்ணாவின் தமிழ் முழக்கம் கேட்டு, பட்டுக்கோட்டையாரிடம் பேச்சுப் பயிற்சி பெற்று, பாலபருவத்திலேயே பாவேந்தரின் பாராட்டுக் கவிதையைக் கேட்டு, மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், ஜெயப்பிரகாஷ்நாராயணன், காயிதே மில்லத், பெரியவர் பக்தவச்சலம், அன்னை இந்திரா காந்தி, அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஆகியோருடன் அரசியல்நடத்தி, கல்லக்குடி, பாளையங்கோட்டை என களம் பல கண்ட என்னைப் பார்த்து அரசியலை விட்டுப் போ என்கிறார்கள் என்றால் அதைஎன்ன சொல்வது?
என் பொது வாழ்வில் பாதியளவு கூட வயதாகவர்கள்தான் இப்படிக் கூறுகிறார்கள். என்னை அரசியலை விட்டு விலகச் சொல்லஅது உன் அப்பன் வீட்டுச் சொத்தும் அல்ல.. உன் அம்மாவின் சொந்த சம்பாத்தியமும் அல்ல...
என் பொது வாழ்வில் பாதியளவு கூட வயதாகவர்கள்தான் இப்படிக் கூறுகிறார்கள். அண்ணா ஒருமுறை சூலூரில் சொன்னார். சூலூரில்தொடங்கும் இந்தப் பயணம் சுடலையூர் செல்லும் வரை ஓயாது என்று.
அந்த அண்ணனின் வழி வந்த தம்பிகள் நாம் என்பதை இந்த நாட்டுக்கு உணர்த்துவோம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications