ஐ.பி.எஸ். அதிகாரிகளும் அதிரடி மாற்றம்: திலகவதிக்கு பதவி உயர்வு
சென்னை:
தமிழக அமைச்சர்களின் இலாகா மாற்றம், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கூண்டோடு மாற்றம் செய்த கையோடுகாவல்துறையிலும் அதிரடி மாற்றங்கள் செய்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இதுவரை ஐ.ஜியாக இருந்து வந்த திலகவதி பதவி உயர்த்தப்பட்டு கூடுதல் டிஜிபியாக்கப்பட்டுள்ளார். நேர்மையான அதிகாரிஎன்ற பெயர் பெற்ற இவர் லஞ்ச- ஊழல் ஒழிப்புத்துறையின் கூடுதல் டிஜிபியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான கொடுமை தடுப்பு, அனைத்து மகளிர் காவல் நிலையங்களை கவனிக்கும் பொறுப்பும் திலகவதியிடம்தொடர்ந்து இருக்கும்.
இதுவரை லஞ்ச-ஊழல் தடுப்பு கூடுதல் டி.ஐ.ஜியாக இருந்த வி.கே.ராஜகோபாலன் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால்,அவருக்கு எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் விருப்ப ஓய்வு பெற்றுவெளியேறிவிடுவார் என்று தெரிகிறது.
அதே போல மின்வாரிய கூடுதல் டி.ஜி.பியாக இருந்த நந்தகோபாலன் தூக்கப்பட்டுள்ளார். அவருக்கும் எந்தப் பதவியும்தரவில்லை. அவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதே போல காவல்துறை பயிற்சிப் பள்ளியின் டி.ஐ.ஜி. அலெக்சாண்டரும் காத்திப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.பயிற்சிப் பள்ளி டி.ஐ.ஜி. பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
திலகவதி தவிர மேலும் 6 ஐ.ஜிக்களும் கூடுதல் டிஜிபிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மேலும் பல அதிகாரிகள் இட மாற்றம்செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications