எல்லையில் அல்-கொய்தா தீவிரவாதிகள் இல்லை: பாக்.
இஸ்லாமாபாத்:
இந்திய எல்லையில் அல்-கொய்தா தீவிரவாதிகள் இல்லை என பாகிஸ்தான் மறுத்துள்ளது.
பின் லேடனின் அல்-கொய்தா தீவிரவாதிகள் கும்பல் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தாக்குதலில் இருந்து தப்பிபாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளது. இவர்களை பாகிஸ்தான் இந்தியாவுக்குள் அனுப்ப முயன்று வருகிறது.
இதை இந்திய ராணுவமும் அமெரிக்காவும் உறுதி செய்துள்ளன. இந்தியா வந்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்டோனால்ட் ரம்ஸ்பீல்ட இதனைத் தெரிவித்தார்.
ஆனால், உலகமே ஒப்புக் கொண்டுவிட்ட இந்த உண்மையை பாகிஸ்தான் வழக்கம்போல் மறுக்கிறது. அந் நாட்டுராணுவ செய்தித் தொடர்பாளர் ரஷீத் குரேஷி கூறுகையில்,
டோனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறியதில் துளிகூட உண்மையில்லை. இது எங்கிருந்து அவருக்குக் கிடைத்தது என்றுதெரியவில்லை. இந்தியாவின் பொய்ப் பிரச்சாரத்தை அமெரிக்கா நம்புகிறதோ என்று நினைக்கிறோம்.
காஷ்மீர் பிரச்சனையை திசை திருப்ப இந்தியா வழக்கமாக செய்து வரும் செயல்களில் இதுவும் ஒன்று என்றார்.
நேற்று டெல்லியில் இருந்த ரம்ஸபீல்ட் இன்று இஸ்லாமாபாத்தில் உள்ளார்.
படை வாபஸ் இல்லை: இந்தியா
பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்தியப் படைகளை வாபஸ் பெற மாட்டோம் என வெளியுறவுத்துறைஇணையமைச்சர் ஒமர் அப்துல்லா கூறினார்.
அப்துல்லா கூறுகையில், ரம்ஸபீல்ட் கூறியதைப்போல அல்-கொய்தாவை எதிர்கொள்ள எங்களுக்கு வெளிநாட்டுபடைகளின் உதவி தேவையில்லை. எந்தத் தீவிரவாதிகளையும் இந்திய ராணுவம் முறியடிக்கும்.
தீவிரவாதிகளை ஒடுக்குவோம் என சர்வதேச நெருகுதலுக்கு அஞ்சி பாகிஸ்தான் பொய்யான உறுதிமொழிகளைத்தந்துவிட்டு தப்பிக்க முடியாது. உண்மையிலேயே தீவிரவாதிகளை ஒடுக்காத வரை இந்தியப் படைகள் எல்லையில்நிற்கும். பாகிஸ்தானுக்கு நெருக்குதல் தருவதை இந்தியப் படைகள் நிறுத்தாது.
எங்கள் நாட்டுக்குள் தீவிராவாதிகள் நுழைவது நிற்கும் வரை பாகிஸ்தானை விட மாட்டோம் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications