தமிழகத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்
சென்னை:
இந்திய- பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை பயன்படுத்தி சென்னையில் தேச விரோத அமைப்புகள்தீவிரவாத செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுப் பிரிவு மாநில போலீசாரை எச்சரித்துள்ளது.
இதையடுத்து சென்னையில் போலீசாரின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உருவாக்கப்பட்டசிறப்பு அதிரடிப் படையினர் உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் போலீசார் சிறு சிறு குழுக்களாக ரகசிய கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை நகர காவல்துறை ஆணையாளர் விஜய்குமார் இந்தத் தகவல்களை உறுதி செய்தார். சமீபத்தில் டி.ஜி.பி.அலுவலகம் அமைந்துள்ள கடற்கரைச் சாலையில் உள்ள லைட்ஹவுசில் ஒருவன் பைனாகுலர்களுடன் ஏறிகண்காணித்தான்.
இதை பார்த்த ரகசிய போலீசார் உடனடியாக சென்னை காவல்நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்தனர்.உடனே போலீசார் விரைந்து வந்து அவன் கீழே இறங்கியவுடன் வளைத்துப் பிடித்தனர்.
அவனை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு கொண்டு சென்று நன்றாக கவனித்தனர். அடி பொறுக்காமல் அவன் கக்கியவிஷயங்கள் அதிர்ச்சியைத் தந்துள்ளன.
சென்னையில் அசம்பாவித சம்பவங்களை நடத்த தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டிருப்பது தெரியவந்தது.
இன்று நிருபர்களிடம் பேசிய விஜய்குமார், சென்னை நகர் முழுவதும் தீவிரவாதிகளுக்கு எதிரான கண்காணிப்புபலப்படுத்தப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி. ஏரியாக்களுக்கும் துறைமுகம் உள்ளிட்ட இடங்களுக்கும் மிக பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.
ரயில் நிலையத்துக்கு மிரட்டல்:
இந் நிலையில் கன்னியாகுமரி ரயில் நிலையத்துக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் அல்-உம்மாதீவிரவாத இயக்கத்தின் தலைவர் பாட்சா மற்றும் மதானி ஆகியோரை 55 நாட்களுக்குள் சிறையில் இருந்துவிடுவிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ரயில் நிலையத்தையும் தண்டாளங்களையும் குண்டு வைத்துத்தகர்ப்போம் என்றும் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இதையைடுத்து கன்னியாகுமரி ரயில் நிலையத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்தண்டவாளங்களைக் கண்காணிக்க சிறப்புப் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications