காவிரியில் தண்ணீர் விடக் கோரி திமுக விவசாய அணி டெல்லி- கர்நாடகம் பயணம்
சென்னை:
காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி திமுக விவசாய அணித் தலைவர்கள் பிரதமர் வாஜ்பாயையும் கர்நாடகமுதல்வர் கிருஷ்ணாவையும் சந்தித்து வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுத்து வருவதால் மேட்டூர் அணையும் வறண்டு வருகிறது. தஞ்சை,நாகப்பட்டிணம் போன்ற மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள குறுவைப் பயிறுக்கு தண்ணீர் திறந்துவிடும் அளவுக்குமேட்டூரில் நீர் இல்லை.
இதனால் வங்கிகளில் கடன் வாங்கியும், நாற்றை கடனாக வாங்கியும் நட்டு வைத்துள்ள விவசாயிகள் வயிற்றில்நெருப்பைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்துள்ளனர்.
தண்ணீர் வராவிட்டால் பயிர்கள் காய்ந்துவிடும் நிலை உருவாகியுள்ளது. காவிரியில் நீர் விடக் கோரியும் தமிழகஅரசு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் தஞ்சை மாவட்டத்திலும் சுற்றுப் பகுதி காவிரிபாசன மாவட்டங்களிலும் விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி இந்த போராட்டங்களுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லை.
தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் பிரதமர் வாஜ்பாயிடம் காவிரி நீரைத் திறந்துவிடுமாறு கர்நாடகத்தைவலியுறுத்தக் கோரினார். ஆனால், அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
இந் நிலையில் ஜனநாயக வாலிபர் இயக்கத்தினர் தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திமுகவின் விவசாய அணித் தலைவர் கே.பி. ராமலிங்கம் டெல்லியில் பிரதமர் வாஜ்பாயையும் கர்நாடகம் சென்றுமுதல்வர் கிருஷ்ணாவையும் சந்திக்க உள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications