விமானப் படைக்கு 140 புதிய பிரான்ஸ் போர் விமானங்கள்
டெல்லி:
தேசிய பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டிக் கூட்டம் இன்று டெல்லியில் கூடியது.
சமீபத்தில் பாகிஸ்தானுடனான பதற்றம் குறைந்து வருவதையடுத்து நடக்கும் முதல் கூட்டம் இது.
இக் கூட்டத்தில் எல்லை நிலவரம், பாகிஸ்தானில் காத்திருக்கும் தீவிரவாதிகள் ஆகியவை குறித்துவிவாதிக்கப்படும்.
பிரதமர் வாஜ்பாயின் இல்லத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டஸ்,வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், உள்துறை அமைச்சர் அத்வானி, முப்படைத் தலைவர்கள், பாதுகாப்புஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா, ராணுவ உளவுப் பிரிவினர், மத்திய உளவுப் பிரிவினர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
விமானப் படை:
உடனடியாக மிராஜ்-2000 ரக போர் விமானங்களை வாங்க வேண்டும் என இந்திய விமானப் படை மத்தியஅரசிடம் வலியுறுத்தியுள்ளது.
மிக் விமானங்கள் விபத்துக்குள்ளாகி வருவதாலும் ரஷ்யாவிடம் இருந்து சுகோய்- 30 ரக விமானங்கள் வருவதில்தாமதம் ஏற்பட்டுள்ளதாலும் மிராஜ்-2000 விமானங்களை உடனே வாங்க வேண்டும் என விமானப் படைவலியுறுத்தி வருகிறது.
இப்போதுள்ள எல்லைப் பகுதி நிலவரத்தைக் கணக்கில் கொண்டு 140 விமானங்களை வாங்க வேண்டும் எனவிமானப் படை கூறியுள்ளது.
பாகிஸ்தானிடம் உள்ள லேட்டஸ்ட் விமானங்கள் இந்த மிராஜ்கள் தான். பிரான்ஸ் தயாரிப்பான இந்த விமானங்கள்மூலம் அணுகுண்டுகளை வீச முடியும். இந்தியாவிடமும் இந்த ரக விமானங்கள் உள்ளன.
கார்கில் போரின்போது தீவிரவாதிகளையும் பாகிஸ்தான் படையினரையும் தேடித்தேடி மிகத் தவறாமல் குணடுவீசித் தாக்க இந்த விமானங்கள் உதவின. எதிரி நாட்டு ராடார்களை ஜாம் செய்துவிடும் திறன் படைத்தவை இந்தவிமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானப் படையின் இந்த கோரிக்கை குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுவிட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பான விவரங்கள்இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படுகின்றன.
அமெரிக்கா மேற்கொண்டு அமைதி முயற்சிகள் குறித்தும் இதில் விவாதிக்கப்படுகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications