அலை மோதிய நிருபர்கள்
அடுத்த குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள விஞ்ஞானி அப்துல் கலாம் முதலில் நிருபர்களை சந்திக்காமல் செய்தியை மட்டும்வெளியிட்டார். பின்னர் அண்ணா பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்தின் முன் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.
ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் பேட்டி கொடுக்கும் இடம் கடைசி நிமிடத்தில் தான் அறிவிக்கப்பட்டது. இதனால்,நிருபர்களும், புகைப்படக்காரர்களும் குழம்பிப் போய் விட்டனர்.
அண்ணா பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்தில்தான் கலாம் தங்கியுள்ளார். இதையடுத்து அங்கு தான் அவர் பேட்டி கொடுப்பார் என்றுநிருபர்கள் அங்கு படையெடுத்தார்கள். ஆனால் துணைவேந்தர் அறையில் அவர் பேட்டி கொடுக்கலாம் என்று சிலர் சந்தேகம் எழுப்பவேஅங்கும் ஓடினர் நிருபர்கள்.
ஆனால், பல்கலைக்கழக விருந்தினர் இல்லம் முன்பாகவே அவர் நிருபர்களை சந்தித்தார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக கலாம் அருகில் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.
அங்கு வந்த கலாம், செய்தியாளர்களிடம் அனைவரும் செளக்கியமா, இந்த இடம் வசதியா இருக்கா என்று கேட்டார்.
அப்போது புகைப்படக்காரர்கள் தரப்பிலிருந்து உங்களை அருகில் வந்து படமெடுக்க அனுமதிக்க வேண்டும் என்றனர். அதற்கு, எடுத்துட்டாபோச்சு என்று கூறிய கலாம், பாதுகாப்பை கொஞ்சம் தளர்த்துமாறு போலீசாரிடம் கூறினார்.
பிறகு புன்னகையுடன் புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தார்.
பேட்டியின்போது எழுதி வைத்திருந்த செய்தியை வாசித்த அவர் அவ்வப்போது புரிகிறதா என்று கேட்டுக் கொண்டார். அவ்வப்போதுஆசிரியராகவும் மாறி நிருபர்களையே கேள்வி கேட்டார்.
போர்பந்தர் எதற்குப் பெயர் பெற்றது தெரியுமா? என்றார் . அதற்கு ஒரு நிருபர், அங்குதான் சாரக் மகாத்மா காந்தி பிறந்தார் என்றார். இதைக்கேட்டதும் புன்னகைத்த கலாம், வெரிகுட், வெரிகுட் என்றார்.
தமிழில் பேட்டி கொடுத்தாலும் அவ்வப்போது அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துச் சொன்னார். மொத்தத்தில் இந்தப் பேட்டி மிகவும்வித்தியாசமாக இருந்தது. நிருபர்களுக்கு இந்த பேட்டியே மிக வித்தியாசமாக இருந்தது. அரசியல்வாதிகளைப் பார்த்து, பார்த்துப் புளித்துப்போயிருந்த செய்தியாளர்களுக்கு சாதாரண செருப்புடன் மிகவும் எளிமையாக வந்து அன்புடன் பேசிய கலாமைக் கண்டுபெருத்த ஆச்சரியமாக இருந்தது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications