காஷ்மீர் எல்லையை கண்காணிக்க அமெரிக்க சென்சார்கள்
டெல்லி:
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவலைக் கண்காணிக்க கிரவுண்ட் சென்சார்களைபொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க உதவியுடன் இந்த சென்சார்கள் பொறுத்தப்படும். நேற்று முன் தினம் இந்தியா வந்த அமெரிக்கபாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட்சும், முன்னதாக இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவுத்துறைஇணையமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜூம் இந்த யோசனையைத் தெரிவித்தனர்.
இதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இன்று பிரதமரின் இல்லத்தில் நடந்த தேசப் பாதுகாப்புக்கான கேபினட்கமிட்டிக் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டது.
இந்திய பாதுகாப்பு அமைச்சகமும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமும் இணைந்து இந்த சென்சார்களை எல்லைமுழுவதும் பொறுத்தும். இதற்கான பயிற்சி பெற இந்திய நிபுணர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவர்.
லேசர், கேமராக்கள் அடங்கிய இந்த சென்சார்கள் பகலிலும் இரவிலும் எந்த காலநிலையிலும் எல்லையைதீவிரமாகக் கண்காணிக்க உதவும். இந்தக் கருவிகளை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கும்.
அதே நேரத்தில் எல்லையைக் கண்காணிக்க அமெரிக்க- பிரிட்டன் ஹெலிகாப்டர் படைகளை அனுமதிப்பதில்லைஎன்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்துவதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டது.
பாகிஸ்தானுக்கான தூதராக ஹரிஷ் பாசினை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் இல்லத்தில் இன்று காலை தொடங்கி சுமார் 3 மணி நேரம் இக் கூட்டம் நடந்தது.
எல்லையில் சண்டை தணிந்தது:
இதற்கிடையே எல்லையில் இந்திய நிலைகளை நோக்கி பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகளால் சுடுவதை பாகிஸ்தான்பெருமளவில் குறைத்துக் கொண்டுள்ளது. இதனால் இந்தியப் படைகளும் பதிலடியை நிறுத்திவிட்டன.
இதைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் அமைதி ஏற்பட்டுள்ளது. நேற்று இரவிலிருந்து ஒரிரு சிறிய பீரங்கித்தாக்குதல்கள் தவிர வேறு எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என ராணுவம் தெரிவித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications