பா.ஜ.க.- பா.ம.க. கோரிக்கை
சென்னை:
பாரத ரத்னா அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்க இடது சாரிக் கட்சிகள் ஒத்துழைக்கவேண்டும் என்று பாரதீய ஜனதாக் கட்சி தலைவர் எச்.ராஜா கோரியுள்ளார்.
இதுகுறித்து அரியலூரில்செய்தியாளர்களிடம் பேசுகையில், பாரத ரத்னா அப்துல் கலாமை போட்டியின்றித் தேர்ந்தெடுப்பதேசரியானதாக இருக்கும். அவருக்கு எதிராக இடது சாரிக் கட்சிகள் வேட்பாளரை நிறுத்தியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
இப்போதும் கூட காலம் போய் விடவில்லை. தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்று விட்டு கலாக்கு ஆதரவு தெரிவிக்க இடதுசாரிகள் முன்வர வேண்டும். இந்தப் போட்டி தேவையற்றது என்றார்.
இதேபோல, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸும் இடது சாரிக் கட்சிகள் தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.
போட்டி இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு வேட்பாளரை நிறுத்துவது சரியல்ல என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications