வாஜ்பாய் வீட்டில் விருந்து
சென்னை:
பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக இன்று(திங்கள்கிழமை) காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
சென்னையில் இருந்து இன்று காலை 6.45 மணிக்கு வழக்கமான இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அப்துல் கலாம் டெல்லிசென்றார்.
அப்துல் கலாமை மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் சென்னைக்கு வந்து அழைத்துச் சென்றார். சென்னை விமான நிலையத்தில்அவரை தமிழக அமைச்சர்கள், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பல கட்சிப் பிரமுகர்கள், பொது மக்கள்பொன்னாடைகள் போர்த்தி வழியனுப்பி வைத்தனர். அப்போது நிருபர்களிடம் பேசிய கலாம், டெல்லிக்குப் போறேன்.. வந்துபார்க்கிறேன் என்று மிக எதார்த்தமாக பேசியபடி சென்றார்.
டெல்லி போய்ச் சேர்ந்த கலாமை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பிரதமர்அலுவலகத்துறை அமைச்சர் கோயல், விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷானவாஸ் ஹூசைன், கலாமைஜனாதிபதியாக்கலாம் என்று முதன்முதலில் கூறிய சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவரான அமர்சிங் ஆகியோர் வரவேற்றனர்.
அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர். வீரத் திலகம் இட்டு அழைத்துச் சென்றனர். அவருக்கு மாலை அணிவிக்க முடியாதபொது மக்கள் அவர் சென்ற கார் மீது மாலைகளை வீசினர்.
பின்னர் கலாம் பிரதமர் வாஜ்பாயை அவரது இல்லத்தில் சந்தித்தார். கலாமை ஜனாதிபதி பதவிக்கு வாஜ்பாய் அறிவித்த பின்னர்இருவரும் இப்போது தான் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்கின்றனர். அப்துல் கலாமை கட்டித் தழுவி வாழ்த்துத் தெரிவித்தார்வாஜ்பாய். பின்னர் இருவரும் தனியே ஆலோசனை நடத்தினர்.
இதன் பின்னர் அப்துல் கலாமுக்கு வாஜ்பாய் மதிய விருந்தளித்தார். இதில் மத்திய அமைச்சர்கள் அத்வானி, பிரமோத் மகாஜன்ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை.
இதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசின் வீட்டுக்குச் சென்ற கலாம் அவருடன் 1 மணி நேரம் ஆலோசனைநடத்தினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோரையும் கலாம் இன்றுசந்திக்கிறார். இடையிடையே தன்னை வாழ்த்த வந்த பாதுகாப்புத்துறையின் விஞ்ஞானிகளுடனும் அவர் முக்கியஆலோசனைகள் நடத்தினார்.
தேவ கெளடா பிரதமராக இருந்தபோது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த முலாயம் சிங் யாதவ் தான்அப்துல் கலாமுக்கு பாரத ரத்னா விருது கிடைக்கச் செய்தார். அவர் தான் இப்போதும் அப்துல் கலாம் பெயரைஜனாதிபதி பதவிக்கு முதன்முதலில் முன் மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications