பாகிஸ்தானுக்கு ரஷ்ய ஹெலிகாப்டர்கள்?
இஸ்லாமாபாத்:
ரஷ்யாவிடமிருந்து பாகிஸ்தான் 4 ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் 4ஹெலிகாப்டர்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பாகிஸ்தான் ராணுவத்திடமும் விமானப் படையிடமும் இதுவரை தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இல்லை. இப்போதுரஷ்யாவிடமிருந்து இவற்றை வாங்கியுள்ளதாக பாகிஸ்தானின் த நியூஸ் பத்திரிக்கை தெரிவிக்கிறது.
கஜாகிஸ்தானில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் நடந்த சந்திப்பின்போது இந்த ஹெலிகாப்டர்களைவாங்குவது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் பேச்சு நடத்தியதாகவும் அந்தப்பத்திரிக்கை கூறுகிறது.
அது எந்த ரகத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் என்று தெரியவில்லை. இதுவரை பாகிஸ்தானுடன் ரஷ்யா எந்தவிதமானராணுவ உறவும் வைத்துக் கொண்டதில்லை. இந்தியா தான் ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்து வருகிறது.
இந்த ஹெலிகாப்டர் விற்பனை குறித்த தகவல்களை உறுதி செய்ய முடியவில்லை. திசை திருப்பும் நோக்கத்துடன்பாகிஸ்தான் அரசே இந்தச் செய்தியைப் பரப்பியிருக்கலாம் என பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அப்படியே ஹெலிகாப்டர்களை வழங்கியிருந்தாலும் இந்தியாவுடன் முன்னதாகவே ரஷ்யா கலந்துஆலோசித்திருக்கக் கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அணு குண்டு இருப்பதால் தப்பினோம்:
அணு குண்டு இருப்பதால் தான் பாகிஸ்தான் இந்தியா தாக்கவில்லை என அந் நாட்டின் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் கூறியுள்ளார்.
இந்தியாவுடன் போரை நாங்கள் விரும்பவில்லை. ஆனால், காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக இருப்போம். அணு ஆயுத போர் மூளும் என்று பல நாடுகளும்நெருக்குதல் கொடுத்ததால் தான் இந்தியா தனது தாக்குதல் திட்டத்தை கைவிட்டது என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications