வாஜ்பாய் உடல் நிலை குறித்து டைம் தவறான செய்தி
வாஷிங்டன்:
இந்தியப் பிரதமர் வாஜ்பாய் மிகவும் உடல் நிலை தளர்ந்துபோய் உள்ளதாக அமெரிக்காவின் டைம் வார இதழ்வெளியிட்டுள்ள செய்திக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
வாஜ்பாயால் எதிலும் நன்றாக கவனம் செலுத்த முடியவில்லை எனவும், உடலின் பல பாகங்களும்பாதிக்கப்பட்டுள்ளதாகவும் டைம் வார இதழ் கூறியுள்ளது. இதனால் இவரது கட்டுப்பாட்டில் அணு ஆயுத பட்டன்இருப்பது சரியா என்றும் டைம் வார இதழில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறையின் சார்பில் டைம் வார இதழுக்குகண்டனக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை அடுத்த இதழில் டைம் வெளியிடவுள்ளது.
மத்திய ரயில்வேதுறை அமைச்சர் நிதீஷ் குமார் நிருபர்களிடம் பேசுகையில், அமெரிக்காவின் பத்திரிக்கை என்றால்என்ன வேண்டுமானாலும் எழுதிவிடலாமா என்று கேள்வி எழுப்பினார். ரயில்வே துறை சார்பாகவும் டைமுக்குகண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் நடந்த இந்திய- அமெரிக்க வர்த்தகக் கவுன்சில் கூட்டத்திலும் டைம் வார இதழுக்கு கண்டனம்தெரிவிக்கப்பட்டது.
இந்திய தொழில் வர்த்தக சபையின் பொதுச் செயலாளர் தருண் தாஸ் பேசுகையில், கொஞ்சம் கூடஉண்மையில்லாத, ஒரு தலைப்பட்சமான, இந்தியர்களை வருத்தும் நோக்கத்தில் இந்தச் செய்திவெளியிடப்பட்டுள்ளது என்றார்.
சமீபத்தில் டெல்லியில் அமெரிக்க அதிகாரிகளும் அமைச்சர்களும் வாஜ்பாயை சந்தித்துப் பேசினர். அவர்களில்யாரும் வாஜ்பாயிடம் பேசும்போது சிரமம் இருந்தாதக் கூறவில்லை. டைம் வார இதழுக்கு மட்டும் எப்படி இந்ததவறான செய்தி கிடைத்தது என்றார்?
பின்னர் பேசிய இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளாக்வில், இந்தியாவுக்குள் தீவிரவாதிகள்நுழைவதை தடுக்கவும், தீவிரவாதிகள் முகாம்களை நிரந்தரமாக மூடிவிடவும் பாகிஸ்தானுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது நாங்கள் எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொண்டோமோஅதே அளவு தீவிரமாகத் தான் இந்திய நாடாளுமன்றத்தை தீவிரவாதிகள் தாக்கியதையும் எடுத்துக் கொண்டோம்.
சமீபத்தில் பாகிஸ்தான் சென்ற அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் இந்தவிவகாரத்தில் பாகிஸ்தானிடம் கடுமையாகவே பேசினார். இப்போது எல்லையில் பதற்றம் மிக வேகமாகக்குறைந்து வருகிறது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications