விடுமுறையில் செல்ல ராணுவ வீரர்களுக்கு அனுமதி
டெல்லி:
6 மாதங்களுக்குப் பின் இப்போது தான் முதன்முறையாக இந்திய ராணுவ வீரர்களுக்கு விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.
எல்லையில் பதற்றம் அதிகரித்ததால் வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டனர். அவர்களது விடுமுறைகள் ரத்துசெய்யப்பட்டன. காஷ்மீர் முதல் ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் என எல்லை முழுவதும் வீரர்கள் கடந்த 3மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தனர்.
இப்போது எல்லையில் பதற்றம் குறைந்து வருவதால் ராணுவ வீரர்களுக்கு முதன்முதலாக விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் அழைப்பு வரலாம் என்ற எச்சரிக்கையுடன் இந்த வீரர்கள்விடுமுறையில் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
எல்லையில் தீவிரவாதிகள் நுழைவது பெருமளவில் குறைந்து விட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் கூறினார்.
ராணுவத் தளபதி ஜெனரல் பத்மநாபனும் இதையே தெரிவித்தார். சன் டிவி நிருபரிடம் அவர் தமிழில் அளித்தபேட்டியில், கடந்த மே இரண்டாம் வாரத்தில் இருந்து இன்று வரை ஒரே ஒரு தீவிரவாதி தான் ஊடுருவினான்.பாகிஸ்தான் இப்படியே நல்ல பிள்ளையாக இருப்பது நல்லது. ஏதாவது தகராறு செய்தால் என்ன செய்யனும்னுஎனக்குத் தெரியும் என்றார்.
எல்லையில் நிலைமை சகஜமாகி வருவதால் பஞ்சாபின் வாஹா எல்லை வழியாக தரைவழிப் போக்குவரத்தைஇந்தியா மீண்டும் அனுமதிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் இந்தியாவிருந்து கார்கள் மூலம் பாகிஸ்தானுக்குள்செல்ல முடியும்.
அதே போல இரு மாநில ராணுவ டைரக்டர் ஜெனரல்களும் அவ்வப்போது பேச்சுவார்த்தையில் கூட ஈடுபடலாம்என்ற யோசனையையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறினார்.
இரு தரப்பினரும் பேச்சு நடத்தலாம் என்று இந்தியா கூறியிருப்பது இதுவே முதன்முறையாகும். இரு ராணுவடைரக்டர் ஜெனரல்களுக்கும் இடையே ஹாட்-லைன் வசதி உள்ளது. அதன் மூலம் அவ்வப்போது எல்லையில்தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளிட்ட பிற பிரச்சனைகளை பேசிக் கொள்ளலாம் என சிங் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications