ரெளடித்தனம் செய்பவர் மேயராவதா? இளங்கோவன் கேள்வி
சென்னை:
கராத்தே தியாகராஜன் போன்ற ரெளடித்தனம் செய்பவர்கள், கட்டப் பஞ்சாயத்து ஆசாமிகள் மேயர் பொறுப்புக்குவருவது மிக மோசமான முன் உதாரணமாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர்,
காவிரியில் கர்நாடகம் தண்ணீர் விடாததால் மேட்டூர் அணை வறண்டு போய்விட்டதாகக் கூறி விவசாயிகளுக்குநீரைத் திறந்துவிட இயலாத நிலையில் உள்ளதாகச் சொல்லும் தமிழக அரசு அதைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
காவிரியில் நீர் விடக் கோரி கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவை முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேச வேண்டும்.இது ஒரு மாநிலம் தொடர்பான பிரச்சனை. இதில் முதல்வர் தலையிட்டால் தான் தீர்வு கிடைக்கும்.
எல்லோரையும் அரவணைத்து, அன்புடன் நடந்து இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
கராத்தே தியாகராஜனைப் போன்ற ஒருவர் மேயர் பொறுப்புக்கு வந்துள்ளதன் மூலம் ரெளடிகள், கட்டப்பஞ்சாயத்து, அடாவடி பேர்வழிகளும் இனிமேல் மேயராகலாம் என்ற தவறான முன் உதாரணம் ஏற்பட்டுவிட்டது.
இது மாநகராட்சிக்கும் மக்களுக்கும் நல்லதல்ல. அவரை மேயர் பொறுப்புக்கு வரச் செய்வதன் மூலம் மிகமோசமான, தவறான முன் உதாரணம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்டாலின் பதவிப் பறிப்பை எதிர்த்து கைது செய்யப்பட்ட திமுகவினர் அனைவரையும் உடனடியாக விடுவிக்கவேண்டும்.
காங்கிரஸ்- த.மா.கா. இணைந்தால் யாருக்கு என்ன பதவி தருவது என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி முடிவு செய்வார் என்றார் இளங்கோவன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications