ரவுடி கும்பலை டாக்சியில் விரட்டி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பயங்கர ஆயுதங்களுடன் சென்று கொண்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதி பாண்டி உள்ளிட்ட 11 பேரை பெண் போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் படை துணிகரமாக மடக்கிக் கைது செய்தது.
தூத்துக்குடியைச் சேர்ந்தவன் பாண்டி. பல்வேறு வழக்குகள் இவன் மீது உள்ளன. கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பாண்டி ஜாமீன்கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தான். இது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பரோலில் வெளியே வந்தான்பாண்டி.
பரோலில் வந்த பாண்டி, தனது ஆதரவாளர்கள் 10 பேருடன் ஒரு வேனில் பயங்கர ஆயுதங்களுடன் கோவன்கோடு என்ற இடத்திற்குசென்று கொண்டிருந்தான். அந்தப் பகுதியில் உள்ள ஒருவரிடமிருந்து பணம் பறிப்பதற்காகவே அவர்கள் சென்றதாகத் தெரிகிறது.
இதுகுறித்து சாயர்புரம் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் கெளசல்யாவுக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் படையுடன்கெளசல்யா விரைந்து சென்றார். போலீஸ் ஸ்டேஷனில் அப்போது ஜீப் இல்லாத காரணத்தால டாக்சி ஒன்றைப் பிடித்து அவர்கள்புறப்பட்டனர்.
பாண்டி உள்ளிட்ட கும்பல் சென்ற வேனை டாக்சியில் விரட்டிச் சென்றனர். தங்களை போலீசார் விரட்டுவது கண்ட அந்தக் கும்பல் ஜீப்பைபடு வேகத்தில் விரட்டியது.
டாக்சியையும் அதே வேகத்தில் வேகமாக ஓட்டச் செய்த சப்- இன்ஸ்பெக்டர், இந்த ஜீப்பை துப்பாக்கி முனையில் வழிமறித்தார்.
இதையடடுத்து ஜீப்பிலிருந்து இறங்கி தப்பியோடிய அந்தக் கும்பலை உடன வந்த போலீசார் உதவியுடன் விரட்டிப் பிடித்தார்.
அந்த ஜீப்பில் இருந்து கத்தி, அரிவாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்டேசனில் ஜீப் இல்லாத நிலையில் டாக்சியைப் பிடித்துச் சென்று பயங்கர கொலைகாரக் கும்பலை ஆயுதங்களுடன் வளைத்துப் பிடித்த சப்இன்ஸ்பெக்டர் கெளசல்யாவின் தைரியத்தை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சுமித் சரண் நேரில் சென்று பாராட்டினார்.
பிடிபட்ட கும்பல் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications