திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் வடம் அறுந்தது
திருநெல்வேலி:
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இன்று நடந்த தேரோட்ட நிகழ்ச்சியில் வடம் (கயிறு) அறுந்ததால்பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேரோட்டமும் சிறிது நேரம் தடை பட்டது.
தமிழகத்தின் மிக முக்கிய சிவத் தலங்களில் ஒன்று நெல்லையப்பர் ஆலயம். இங்கு ஆண்டு தோறும் ஆணி மாதம்தேரோட்ட நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்துஇழுப்பது வழக்கம்.
கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் கோவில் திருவிழா தொடங்கியது. இன்று காலை தேரோட்ட நிகழ்ச்சிநடந்தது. இந் நிகழ்ச்சியில் திருநெல்வேலியின் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
காலை மாவட்ட கலெக்டர் சுனில் பாலிவால் தேரை வடம் பிடித்து தோரோட்ட நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.ஆயிரக்ணக்கான மக்கள் வடத்தைப் பிடித்து இழுத்தனர்.
ஆனால், தேர் உருண்டோட ஆரம்பித்த சில நிமிடங்களில் வடம் அறுந்தது. இதனால், தேரை இழுப்பதைநிறுத்துமாறு பக்தர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் தேர் நின்றது. இச் சம்பவத்தால் அங்கு பெரும்பரபரப்பு ஏறபட்டது.
இதையடுத்து புதிய வடம் கொண்டு வரப்பட்டு தேரில் பொறுத்தப்பட்டது. சுமார் 2 மணி நேர தாதமத்துக்குப்பின்னர் மீண்டும் தேரோட்டம் தொடங்கியது.












Click it and Unblock the Notifications