காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு பா.ஜ.க. ஆதரவு: அதிமுக குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்:

கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராகமத்திய பாரதீய ஜனதா அரசு நடந்து கொள்வதாக நிதியமைச்சர் பொன்னையன் குற்றம் சாட்டினார்.

நாமக்கல் அருகே நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர்,

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் இதே போலத் தான் அவர்களும் நடந்து கொள்கின்றனர்.கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் செயல்பட்டனர்.

இப்போது பாரதீய ஜனதாவும் அதையே தான் செய்கிறது. கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும்என்பதற்காக தமிழகத்தின் நலனைப் பற்றி பாரதீய ஜனதா கவலைப்படாமல் இருந்து வருகிறது.

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள திமுகவின் மாறன் மற்றும் மதிமுக அமைச்சர்கள் தமிழகத்துக்காககுரல் கொடுக்காமல் துரோகம் செய்து வருகின்றனர்.

இந்தப் பிரச்சனையில் காவிரி நதி நீர் ஆணையத்தால் எந்தப் பலனும் இல்லை. இதனால், சுப்ரீம் கோர்ட்டைஅணுகுவதைத் தவிர தமிழகத்துக்கு வேறு வழியில்லை.

தமிழகத்தில் மழை வளத்தைப் பெருக்க மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டியது மிக மிக அவசியம்.இப்போதாவது அதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். அதே மழை நீரை கடலில் விட்டு வீணாக்காமல் அதைசேமிக்க வேண்டும் என்றார் பொன்னையன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+