முதல்வர் அலுவலக கம்யூட்டர்களில் வைரஸ் பாதிப்பு: முக்கிய தகவல்கள் அழிந்தன?
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் அலுவலகத்தில் உள்ள கம்யூட்டர்களில் வைரஸ் தாக்கியுள்ளது. இதனால்லட்சக்கணக்கான மக்களின் மனுக்கள் அழிந்து போயின.
கோட்டையில் பொது மக்களை நேரில் சந்திக்கும் ஜெயலலிதாவிடம் தினமும் ஆயிரக்கணக்கான மனுக்கள்தரப்படுகின்றன. இதே போல மாநிலம் முழுவதும் உள்ள அதிமுகவினரும் மனுக்களை வாங்கி அனுப்பிவருகின்றனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் முதல்வரின் செயலகத்தில் உள்ள தனிப் பிரிவினரால் பரிசீலிக்கப்பட்டுநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மனுக்கள் கம்யூட்டர்களில் பதிவு செய்யப்பட்ட பின்னர்அழிக்கப்படுகின்றன.
இந் நிலையில் இந்த தனிப் பிரிவில் உள்ள நெட்வோர்க் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. சர்வரில்ஆரம்பித்து அங்கிருந்த அனைத்து கம்ப்யூட்டர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
நெட்வோர்க் இன்ஜினியர்களைக் கொண்டு தகவல்களை மீட்க முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், மனுக்களுக்குஅனுப்பப்பட்ட பதில்களை மட்டுமே மீட்க முடிந்தது.
பிற விவரங்கள் முழுமையாக அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications