காவிரி ஆணையத்தை புறக்கணிப்பது சரியே: நெடுமாறன், வீரமணி
சென்னை:
காவிரி ஆணையத்தை புறக்கணிக்கும் முதல்வர் ஜெயலலிவின் முடிவை தமிழர் தேசிய இயக்கத் தலைவர்பழ.நெடுமாறன் வரவேற்றுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி ஆணையத்தை புறக்கணிக்கவும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் ஜெயலலிதாஎடுத்துள்ள முடிவு மிகத் துணிச்சலானது. தமிழகத்தின் நலனை பாதுகாக்கக் கூடியது.
1998ம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த ஆணையம் இதுவரை மொத்தமே 3 முறை தான் கூடியுள்ளது. இந்தஆணையம் அளித்த எந்த பரிந்துரையையும் கர்நாடகம் ஏற்கவல்லை.
காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பைக் கூட இந்த ஆணையத்தால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் அந்தஆணையத்தை நம்பிக் கொண்டிருப்பதில் பயனில்லை என்று நெடுமாறன் கூறியுள்ளார்.
வீரமணி வரவேற்பு:
காவிரி ஆணையத்தை புறக்கணிக்கும் தமிழக அரசின் முடிவு பொருதமானதே என திராவிடர் கழகத் தலைவர்வீரமணி கூறினார்.
குஜ்ரால் பிரதமராக இருந்தபோது இந்த ஆணையம் ஒரு திட்டத்தைத் தயாரித்தது. ஆனால், திமுக ஆட்சியில்அந்தத் திட்டம் சிதைக்கப்பட்டது.
இப்போது கர்நாடகத்தை வற்புறுத்த முடியாது என்று பிரதமர் வாஜ்பாய் கூறுவது, தனது பொறுப்பை தட்டிக்கழிப்பது போலாகும்.
பிரச்சனைக்கு விடிவு ஏற்பட கர்நாடகத்தைப் போல தமிழத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டுசெயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார் வீரமணி.
தமிழ் சான்றோர் பேரவை வரவேற்பு:
காவிரி நதி நீர் ஆணையத்தை தமிழக அரசு புறக்கணிப்பதை தமிழச் சான்றோர் பேரவையும் வரவேற்றுள்ளது.












Click it and Unblock the Notifications