""யாரிடமும் விலை போக மாட்டேன்"": சரத்குமார்
சென்னை:
எதிர்க் கட்சியினர் என்னைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். நான் யாரிடமும் விலை போக மாட்டேன். திமுகவில்தான் இருக்கிறேன், அதில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்று அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பியும்நடிகருமான சரத்குமார் கூறினார்.
இதுகுறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 1998ல் தான் நான் திமுகவில் உறுப்பினராகச் சேர்ந்தாலும் 1996லிருந்தே இன்று வரை கட்சிக்காக அயராதுஉழைத்து வருகிறேன்.
நான் எப்போதுமே முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன். இன்னும் நான் திமுகவில் தான் இருக்கிறேன்.அதில் எந்த விதமான மாற்றமும் இல்லை.
சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலின் போது நான் பிரச்சாரம் செய்ய வராதது குறித்து என்னிடம் விளக்கம் கேட்கவேண்டும் என்று திமுக தொண்டர்களே கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்பட்டது. இதற்குநான் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு தெலுங்குப் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் என்னுடைய கழுத்துஎலும்பு நொறுங்கி விட்டது. அதற்காக இடுப்பு பகுதியிலிருந்து ஒரு எலும்பு எடுத்து கழுத்துப் பகுதியில்பொருத்தப்பட்டது.
இந்நிலையில் "தென்காசிப் பட்டணம்" படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் நான் நெப்போலியனைச் சுமக்கும்காட்சியில் இடுப்பு பகுதியில் வலி அதிகரித்துக் கொண்டே இருந்தது.
இதனால் நான் லண்டன் சென்று சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்குள்ள டாக்டர் ஜெயின்என்பவரிடம் இப்போதே "அப்பாய்ன்ட்மெண்ட்" வாங்கா விட்டால் அடுத்த ஆறு மாதத்துக்கு நான் சிகிச்சை பெறமுடியாது.
அதனால் தான் இடைத் தேர்தலின் போது சிகிச்சைக்காக நான் லண்டன் சென்று விட்டேன். தேர்தல் பிரச்சாரத்திலும்கலந்து கொள்ள முடியவில்லை.
ஆனால் எதிர்க் கட்சியினர் சதி செய்து நான் திமுகவிலிருந்து விலகப் போவதாகக் கூறி கட்சிக்குள் குழப்பத்தைஏற்படுத்த முனைகிறார்கள். இதனால் என்னை வேதனையடையச் செய்யவும் அவர்கள் முயற்சிக்கின்றனர்.
நான் யாரிடமும் விலை போக மாட்டேன். திமுகவுக்காக நான் என் உயிரைக் கொடுக்கவும் தயார். எதிர்க்கட்சியினர் என்னை வீணாகச் சீண்டிப் பார்க்க வேண்டாம் என்றார் சரத்குமார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications