பாடமே நடத்தாமல் தேர்வா?: பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர் சாலைமறியல்
சென்னை:
முறையாக பாடங்களையே நடத்தாமல் தேர்வு நடத்தும் பள்ளியைக் கண்டித்து மாணவர்களின் பெற்றோர்கள்சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வடபழனியில் உள்ளது சரஸ்வதி வித்யாலயா பள்ளி. இந்தப் பள்ளியில் சுமார் 2,000 மாணவ,மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இங்கு ஆசியர்களுக்கு சரியாக ஊதியம் தரப்படுவதில்லை என்று தெரிகிறது. இதனால் ஆசியர்கள் மூன்று மாதம்கூட நீடிப்பதில்லையாம். அடிக்கடி ஆசிரியர்கள் மாற்றப்படுவதாகவும், பாடங்கள் உரிய அளவில்நடத்தப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இந் நிலையில் அடுத்த வாரம் மாதத் தேர்வை நடத்த இந்தப் பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது. இந்ததேர்வுகளுக்கான நாள் அறிவிக்கப்பட்டவுடன் பெற்றோர்கள் கொதித்தெழுந்தனர்.
உரிய போர்ஷன்களையே இன்னும் முடிக்காமல் தேர்வு நடத்துவதைக் கண்டித்து நூற்றுக்கணக்கான பெற்றோர்கள்இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். அவர்கள் பிரின்சிபாலை சந்தித்து கேள்விகேட்ட போது, கெட்டவார்த்தைகளால் அவர் திட்டியதாகத் தெரிகிறது.
இதையடுத்து பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
இது குறித்து கருத்துக் கேட்கச் சென்ற நிருபர்களிடம் பிரின்சிபல் பேச மறுத்துவிட்டார்.
மாணவர்களிடம் மிக அதிகமான கட்டணத்தை வசூலித்தாலும் ஆசிரியர்களுக்கு மிகக் குறைவான ஊதியம்தருவதாகவும், இதனால் தான் அவர்கள் தொடர்ந்து அங்கு பணியில் இருப்பதில்லை என்றும் தெரிகிறது. இதனால்மாணவர்களின் கல்வித் தரம் குறைந்து வருவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இது இந்தப் பள்ளியில் மட்டும் நடக்கும் விஷயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பெரும்பாலானதனியார் பள்ளிகளில் இது தான் நிலைமை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications