தாமரைக்கனியின் இளைய மகனுக்கு கத்திக் குத்து: மூத்த மகனின் ஆதரவாளர்கள் வெறிச் செயல்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
திமுகவில் உள்ள தாமரைக்கனியின் இளைய மகனை அதிமுக எம்.எல்.ஏவாக உள்ள மூத்த மகனின்ஆதரவாளர்கள் கத்தியால் குத்தினர். அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.தாமரைக்கனியின் கண் முன்னால் இச் சம்பவம் நடந்தது.
அதிமுகவில் இருந்த தாமரைக்கனி சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இதையடுத்து அவரது மூத்த மகனானஇன்பத் தமிழனுக்கு சீட் கொடுத்து அவரை எம்.எல்.ஏவாக்கினார் ஜெயலலிதா. அவர் தாமரைக்கனியை எதிர்த்துப்போட்டியிட்டு வென்றார்.
இதையடுத்து அப்பாவும் மகனும் ஒருவரை ஒருவர் வசைபாடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவராக தாமரைக்கனி தான் இருந்து வருகிறார். சமீபத்தில் இவரது வீட்டிலேயேகுடிநீர் குழாய் இணைப்புகளை கட் செய்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி.
இந் நிலையில் இன்று காலை தாமரைக்கனி தனது இளைய மகன் தங்கமாங்கனியோடு நகராட்சிக்குச் சென்றார்.அங்கு மூத்த மகனும் அதிமுக எம்.எல்.ஏவுமான இன்பத்தமிழன் பொது மக்களிடம் மனு வாங்கிக் கொண்டிருந்தார்.
இதைப்பார்த்து டென்சனான தாமரைக்கனி, நகராட்சிக்குள் வந்து எப்படி நீ மனு வாங்கலாம் என்றுஇன்பத்தமிழனிடம் கேட்டார். தந்தைக்கு ஆதரவாக தங்கமாங்கனியும் அண்ணணிடம் வாதாடினார். இது பெரும்மோதலாக வெடித்தது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
அப்போது எம்.எல்.ஏ. இன்பத்தமிழனின் ஆதரவாளர்களில் ஒருவன் கத்தியால் தங்கமாங்கனியைத் தாக்கினான்.இதில் தங்கமாங்கனி பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை தனது ஆட்களுடன் சேர்ந்துமருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார் தாமரைக்கனி.
சமீபகாலமாக தாமரைக்கனியை தமிழக பல்வேறு வகைகளில் நெருக்கி வருகிறது. வீட்டில் குழாய் இணைப்பைதுண்டித்ததோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரைக் கொண்டு அவரது வீட்டில் சோதனையும் நடத்தியது அரசு.
இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முழு ஆதரவு அளித்து வருகிறார் தாமரைக்கனியின் மகனானஇன்பத்தமிழன் எம்.எல்.ஏ. இன்று அவரது தம்பியையே இன்பத்தமிழனின் ஆட்கள் கத்தியால் குத்தியுள்ளனர்.
நகராட்சியில் மனு வாங்க வந்த எம்.எல்.ஏவுடன் வந்தவர்கள் எதற்காக கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன்வந்தார்கள் என்று தெரியவில்லை.
இந்தச் சம்பவத்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications