ஜூலை 1 முதல் பாண்டியன் எக்ஸ்பிரஸ் சூப்பர் பாஸ்ட் ரயிலாகும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை- மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலும் சென்னை- திருவனந்தபுரம் மெயிலும் சூப்பர் பாஸ்ட்ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. வரும் 1ம் தேதி முதல் இவை சூப்பர் பாஸ்ட் ரயில்களாகும்.
இதனால் சென்னை- மதுரை பாண்டியன் எக்ஸ்பிரசின் எண் 6619 என்றும் மதுரை- சென்னை பாண்டியன்எக்ஸ்பிரசின் எண் 6620 என்றும் மாற்றப்பட்டுள்ளது.
அதே போல திருவனந்தபுரம் ரயிலின் எண்ணும் 2623, 2624 என்று மாற்றப்பட்டுள்ளது.
இந்த ரயில்களின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதால் முதலிலேயே டிக்கெட் ரிசர்வ் செய்துவிட்ட பயணிகள்கூடுதல் கட்டணத்தை டி.டி.ஆரிடம் செலுத்த வேண்டும் என்று தென்னக ரயில்வே கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications