அரசியல் ஸ்டண்ட் அடிக்கிறார் ஜெ.: கருணாநிதி வர்ணனை
சென்னை:
சென்னை மாநகராட்சியில் ஸ்டாலினிடம் இருந்து பதவியைப் பறித்த கையோடு திமுக வசம் உள்ள பிறமாநகராட்சிகள், நகராட்சிகளையும் கலைக்க அரசு முயற்சி செய்வதாக கருணநிதி குற்றம் சாட்டியுள்ளர்.
திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியில் அதன் தலைவர் தாமரைக்கனிக்கு அரசுபலவிங்களில் நெருக்குதல் தர ஆரம்பித்துள்ளது.
வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை, அவரது மகனான அதிமுக எம்.எல்.ஏ. இன்பத்தமிழனை விட்டுநகராட்சி வளாகத்தில் கலாட்டா போன்ற நடவடிக்கைகளில் அதிமுக ஈடுபட்டுள்ளது.
நேற்று திமுக கட்டுப்பாட்டில் உள்ள இன்னொரு நகராட்சியான விழுப்புரத்தில் அதன் தலைவரை அதிமுகவினர்நகரசபைக் கூட்டத்திலேயே சுற்றி வளைத்துத் தாக்கினர்.
இந் நிலையில திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஸ்டாலின் பதவியைப் பறித்தார்கள். இப்போது திமுக வசம் உள்ள பிற நகராட்சிகளை குறி வைக்கஆரம்பித்துள்ளார்கள். இந்த நகராட்சிகளையே கலைத்துவிடவும் கூட ஜெயலலிதா திட்டமிட்டிருப்பதாகத்தெரிகிறது.
தமிழகத்தில் தினந்தோறும் சாலை விபத்துகள், தினமும் இரண்டுக்கும் மேற்பட்ட கொலைகள், கொள்ளைகள், நகைபறிப்புகள் நடந்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறைக்கு எதிர்க் கட்சியினர் மீது, குறிப்பாகதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடவே நேரம் சரியாக இருக்கிறது. சட்டவிரோதசெயல்களை கண்டுகொள்ள காவல்துறைக்கு நேரம் இல்லை.
காவிரி விவகாரத்தில் உருப்படியான நடவடிக்கை எடுப்பதைவிட்டுவிட்டு விவசாயிளுக்கு நிவாரணத் திட்டம் என்றபெயரில் மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்ளுக்கு பெயரை மாற்றிவிவசாயிகளை ஏமாற்றும் வேலையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
காவிரி ஆணையத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்து காவிரியை வைத்து அரசியல் ஸ்டண்ட் நடத்தி வருகிறார்ஜெயலலிதா என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications