அமைச்சரவை மாற்றம்: பா.ஜ.கவில் மாபெரும் குழப்பம்
டெல்லி:
பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகி மத்திய அமைச்சராவதற்கு ஜனா. கிருஷ்ணமூர்த்திமறுத்து வருகிறார்.
ஜூலை 1ம் தேதி மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்பிரமோத் மகாஜன் கூறியுள்ளா.
நிருபர்களிடம் இன்று பேசிய அவர், ஜூலை 1ம் தேதி மாலை 6 மணிக்கு அமைச்சர்கள் பதவியேற்பு நடக்கும்என்றார்.
முன்னதாக பிரதமர் வாஜ்பாய் ஜூலை 1ம் தேதிக்குள் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று கூறியிருந்தார்.
அமைச்சரவையை மாற்றுவதில் பா.ஜ.கவில் தொடர்ந்து குழப்பங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஜனா.கிருஷ்ணமூர்த்தியை அமைச்சராக்கிவிட்டு கட்சியின் தலைவராக வெங்கைய்யா நாயுடு, பிரமோத் மகாஜன், சுஷ்மாசுவராஜ் போன்ற இளையவர்களில் ஒருவரை நியமிக்க வாஜ்பாயும், அத்வானியும் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், பதவி விலக மாட்டேன் என கிருஷ்ணமூர்த்தி கூறி வருகிறார். நேற்று முன் தினம் அவரை தனதுஇல்லத்துக்கு அழைத்து வாஜ்பாய் பேசினார். நேற்றும் இன்றும் பிரதமரின் தனிச் செயலாளர்களில் ஒருவரானசுதீந்திரா இரண்டு முறை ஜனா. கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்துப் பேசியும் பலன் ஏற்படவில்லை.
மத்திய அமைச்சர் பதவி பிடிக்காவிட்டால் வெளிநாட்டில் தூதர் பதவி அல்லது கவர்னர் பதவி தரவும் தயாராகஇருப்பதாக வாஜ்பாய் கூறியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தனது பதவிக்காலம் இருப்பதால் தொடர்ந்து கட்சித் தலைவராகவே இருப்பேன் என்று ஜனா. கிருஷ்ணமூர்த்தி கூற வருகிறார்.
நேற்று இரவு நிருபர்களிடம் பேசிய பிரதமரிடம், ஜனா. கிருஷ்ணமூர்த்தியை அந்தப் பதவியில் இருந்து நீக்கிவிட்டுஅமைச்சராக்க திட்டமிட்டுள்ளீர்களா? என்று கேட்டபோது,
அவர் எங்கள் கட்சியின் தலைவர். அவர் நினைத்தால் என்னையே பிரதமர் பதவியில் இருந்து தூக்கிவிடமுடியும்என்றார் வாஜ்பாய்.
மத்திய நிதியமைச்சரின் கொள்கைகளால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சங பரிவார் அமைப்புகள்கருதுகின்றன. இதனால் அவரை ஜார்க்கண்ட் முதல்வராக்கிவிட்டு வேறு ஒருவரை நிதியமைச்சராக்கத்திட்டமிடப்பட்டது.
ஆனால், முதல்வராக சின்ஹா மறுத்துவிட்டார். இதனால், அவரை வேறு துறைக்கு அமைச்சராக்கிவிட்டுவெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி, தனியார்மயமாக்கல்துறை அமைச்சர்அருண்ஷோரி அல்லது மனிதவளத்துறை அமைச்சர் மனோகர்சிங் ஜோஷி ஆகியோரில் ஒருவரைநிதியமைச்சராக்க பிரதமர் முடிவு செய்துள்ளார்.
அருண்ஷோரியை பிரதமர் நிதியமைச்சராக்க விரும்புகிறார். ஆனால், அவர் தீவிரமான தனியார்மயமாக்கல்ஆதரவாளர் என்பதால் அவருக்கு ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு உள்ளது.
தனக்கு வெளியுறவுத்துறையை கேட்டு வரும் பரூக் அப்துல்லாவிடம் அந்தத் துறையைத் தந்துவிட்டு ஜஸ்வந்த்சிங்கை நிதியமைச்சராக்க பிரதமர் விருப்பம் தெரிவித்தாலும் பரூக்கை வெளியுறவுத்துறை அமைச்சராக்குவதையும்ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை.
இதனால் பரூக் அப்துல்லாவுக்கு கேபினட் அந்தஸ்துடன் கூடிய விஷேசத் தூதர் பதவி வழங்கப்படலாம் என்றுதெரிகிறது.
இந் நிலையில் நீங்கள் துணைப் பிரதமர் ஆகப் போகிறீர்களாமே என்று அத்வானியிடம் நிருபர்கள் கேட்டபோது,அப்படியா, நான் இதை பத்திரிக்கைகள் மூலம் தான் தெரிந்து கொண்டேன் என்று வர் பதிலளித்துவிட்டார்.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications