ஆலங்குடி குருப்பெயர்ச்சி விழா நாளை தொடக்கம்
ஆலங்குடி:
குருப்பெயர்ச்சி நடைபெறுவதையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆலங்குடி குரு பகவான் ஆலயத்தில்சிறப்புப் பூஜைகள் தொடங்குகின்றன.
தஞ்சையையடுத்த திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உளளது ஆலங்குடி. இங்குள்ள ஆபத்சகாயசுவாமி ஆலயம் குருப் பரிகாரத் தலமாகும்.
இதுவரை மிதுனராசியில் சஞ்சாரித்து வந்த குரு பகவான் வரும் 4ம் தேதி இரவு 10.22 மணிக்கு கடகராசியில்பிரவேசிக்கிறார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி வரை குரு பகவான் இங்கு இருப்பார்.
இதையொட்டி நாளை அதிகாலை 3 மணி முதல் ஆலங்குடி ஆலயத்தில் சிறப்பு ஹோமங்கள் தொடங்கவுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க லட்சக்கணக்கானோர் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் இருந்தும் ஆலங்குடியில்குவிய உள்ளனர்.
இதையடுத்து திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள்ஆலங்குடிக்கு இயக்கப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications