வேலூரில் திமுக, த.மா.கா. கவுன்சிலர்கள் முக்காடு அணிந்து ஒப்பாரி
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூரில் எதிர்க் கட்சி கவுன்சிலர்களின் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்க நகராட்சித் தலைவர்மறுத்து வருவதைக் கண்டித்து திமுக, த.மா.கா., இந்திய தேசிய லீக் கட்சிகளின் கவுன்சிலர்கள் முக்காடு போட்டுஒப்பாரிப் பாடல்களைப் பாடி ஆர்பாட்டம் நடத்தினர்.
வேலூரில் நகராட்சியின் தலைவார இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த கீதா. இவர் எதிர்க் கட்சி கவுன்சிலர்களின்தொகுதிகளில் நலத் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்க மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து திமுக, தமாகா, தேசிய லீக் மற்றும் சுயேச்சைகள் உள்பட 31 கவுன்சிலர்கள் முக்காடு அணிந்துநகராட்சி வளாகத்தில் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது வெறும் 17 அதிமுக கவுன்சிலர்களை மட்டும் வைத்துக் கொண்டுபல முக்கிய தீர்மானங்களை நகராட்சித் தலைவர் கீதா நிறைவேற்றினார்.












Click it and Unblock the Notifications