இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து: தயாராகிறது தூத்துக்குடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தூத்துக்குடிக்கும் கொழும்புவுக்கும் இடையே வரும் ஆகஸ்டு 19ம் தேதி முதல் வாரத்திற்கு 3 நாட்களுக்குப்பயணிகள் கப்பல் விடப்படுகிறது. இதையடுத்து தூத்துக்குடி துறைமுகம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இந்த இரு நகரங்களுக்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்க இலங்கை அரசு முடிவு செய்ததைத்தொடர்ந்து சமீபத்தில் அந்நாட்டின் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழக அரசுடன் பேச்சு நடத்தினார்.

தொடர்ந்து இந்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சருடன் இலங்கை கப்பல் போக்குவரத்துத் துறைஅதிகாரிகள் இதுகுறித்து விரிவாகப் பேச்சு நடத்தினர்.

இதையடுத்து பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசும் தமிழகஅரசும் மேற்கொண்டு வருகின்றன.

தூத்துக்குடி துறைமுகமும் கப்பல் போக்குவரத்துக்காக முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இலங்கையில் உள்ள "திரிஸ்டினோ லங்கா ஷிப்பிங் கார்ப்பரேஷன்" என்ற தனியார் நிறுவனம் இந்தக் கப்பல்போக்குவரத்தை மேற்கொள்ளவுள்ளது. வரும் ஆகஸ்டு 19ம் தேதி முதல் வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு இந்தக்கப்பல் விடப்படுகிறது.

இதற்கான ஒப்பந்தம் இலங்கை அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே அடுத்த மாதம் கையெழுத்தாகவுள்ளது.

விமானத்தை விட கப்பல் கட்டணம் குறைவு என்பதால் அதிகமான பயணிகள் வருவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கப்பல் போக்குவரத்து வெற்றிகரமாக நடந்தால், அடுத்ததாக தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும்இடையேயும் பயணிகள் கப்பலை விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

யாழ்ப்பாண நூலகத்திற்கு தமிழகத்திலிருந்து புத்தகங்கள்:

இதற்கிடையே யாழ்ப்பாணம் நூலகத்திற்கு தமிழக அரசு தமிழ் நூல்களை அளிக்கவுள்ளது.

தற்போது தமிழகத்தில் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வுத்துறை அமைச்சர் ஜெயலத்ஜெயவர்த்தனே இதற்கான வேண்டுகோளை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் விடுத்தார்.

தமிழ் நூல்கள் மற்றும் தமிழ் நூல்கள் அடங்கிய கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தொகுப்புகள் ஆகியவற்றை யாழ்ப்பாணநூலகத்திற்கு அன்பழிப்பாக அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் ஜெயவர்த்தனே வேண்டுகோள்விடுத்தார்.

இது குறித்து பரிசீலனை செய்து மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜெயலலிதாவும் உறுதிஅளித்துள்ளார்.

இலங்கை இனக்கலவரத்தின் போது யாழ்ப்பாண நூலகத்தில் ஏற்பட்ட தீயில் ஏராளமான தமிழ் நூல்கள் எரிந்துசாம்பலாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+