இன்று கருணாநிதி கைதான தினம்
சென்னை:
கடந்த ஆண்டு இதே தினத்தில் தான் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டார்.
ஆனால், இதுவரை மாநில அரசு இந்த விவகாரத்தில் குற்றப் பத்திரிக்கை கூட தாக்கல் செய்யவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மே மாதம் 14ம் தேதி ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, ஜூன் 29ம் தேதி நள்ளிரவுகருணாநிதியைக் கைது செய்தார்.
அவரது வீட்டுக்குள் நுழைந்த போலீசார் அவரை அடித்து இழுத்துச் சென்றதைக் கண்டு தமிழகத்தின் அனைத்துக்கட்சியினரும் மனம் கலங்கினர். நள்ளிரவில் நீதிபதியின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு வைத்தேசிறையில் தள்ள ரிமாண்ட் ஆர்டர் பெறப்பட்டது.
அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்த பின்னர் தான் சிறையில் அடைக்க வேண்டும் என்ற நீதிபதியின் உத்தரவைமீறி நேராக சென்னை மத்திய சிறைச்சாலைக்கு இழுத்துச் செல்லப்பட்டார். அங்கு வாயிலில் தனது மகள்கனிமொழியுடன் தர்ணாவில் ஈடுபட்டார் கருணாநிதி.
சிறைச்சாலையைச் சுற்றி ஆயிரக்கணக்கான திமுகவினர் கூடி கண்ணீர்விட்டுக் கதற நிலைமை மோசமானாதால்தானாகவே சிறைக்குள் சென்றார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் சில தீக் குளிப்பு சம்பவங்கள் நடந்தன. தமிழ்நாட்டில் பதற்றம் நிறைந்தது.சிறைச்சாலையில் அவரை மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சந்தித்தார்.
ஜாமீன் கோர மாட்டேன் என்று அறிவித்த கருணாநிதியை விடுவிக்க மத்திய அரசு நெருக்கடி தந்ததால் ஜூலை 4ம்தேதி மாலை அவர் விடுவிக்கப்பட்டார். வீல்சேரில் அமர்த்தி அவர் வெளியில் அழ்ைதது வரப்பட்டார்.
இந்த விவகாரத்தில் அதிமுக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க பா.ஜ.க. அரசு தவறிவிட்டதாக கருணாநிதிகுற்றம் சாட்டினார். அப்போது முதல் திமுக- பா.ஜ.க. இடையிலான உறவு சீர்குலைந்தது.
இன்று வரை அந்த உறவு சீரடையவில்லை. இந்தச் சம்பவத்துக்குப்பின் பிரதமரின் தலைமையில் நடந்த தேசியஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொள்ளவே இல்லை. கடந்த ஓராண்டாக அவர்டெல்லிக்கே செல்லவில்லை.
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்ததாக கருணாநிதி கைது செய்யப்பட்டார். ஆனால், இந்தவழக்கில் இன்று வரை போலீசார் எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யவில்லை.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications