சிறையில் இருக்கும் சாராய வியாபாரியின் மனைவியை கற்பழித்த ஏட்டைய்யா
திருவள்ளூர்:
சிறையில் இருக்கும் சாராய வியாபாரியின் மனைவியை கற்பழித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சாராயம் காய்ச்சி விற்று வந்தவர் முனியன். இவருக்கு இரண்டுமனைவிகள். பலமுறை அறிவுறுத்தியும் இவர் தொடர்ந்து கள்ளச் சாராயம் காய்ச்சி வந்ததால் இவரை குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து இவர் சிறையில் தள்ளப்பட்டார். இவரிடம் மாமூல் வாங்கி கொழுத்து வந்தவர் ஆர்.கே.பேட்டைகாவல் நிலையத்தைச் சேர்ந்த ஏட்டு முருகேசன். கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்கு மிகவும் உதவிகரமாக இருந்துவந்தார் முருகேசன்.
முனியன் உள்ளே போனதால் கள்ளச் சாரயம் காய்ச்சுவது நின்று போனது. இதனால் ஏட்டைய்யா முருகேசனுக்குவர வேண்டிய மாமூலும் நின்றது. இதையடுத்து முனியனின் இரண்டாவது மனைவி ராணியை அழைத்த ஏட்டுமீண்டும் சாராயம் காய்ச்சி விற்கச் சொன்னார். மேலும் தனது சின்னவீடாக இருக்குமாறும் மிரட்டி வந்தார்.
ஒரு நாள் ராணியின் வீட்டுக்கு வந்த ஏட்டு முருகேசன், உன் மீது கள்ளச் சாராய வழக்கு போடப் போகிறேன்,தப்பிக்க வேண்டுமானால் என் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று மிரட்டி கற்பழித்தார்.
இத் தகவலை சிறையில் இருக்கும் தனது கணவரிடம் தெரிவித்தார் ராணி.
இதையடுத்து முனியன் சிறையின் கண்காணிப்பாளர் மூலமாக முருகேசன் மீது காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இது குறித்த விசாரித்த மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்தாஸ் உடனடியாக ஏட்டு முருகேசனை கைது செய்யஉத்தரவிட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
-->


Click it and Unblock the Notifications
