பாண்டிச்சேரி: எம்.எல்.ஏ.- மாஜி மந்திரி கோஷ்டி மோதல் நடு ரோட்டில் த.மா.கா. தொண்டர் கொலை

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏவின் ஆதரவாளர்களுக்கும் த.மா.காவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரின்ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த பயங்கர கோஷ்டி மோதலில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார். மேலும்பலர் காயமடைந்தனர்.

இச் சம்பவத்தையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாண்டிச்சேரி பாகூர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜவேலு. இவரை எதிர்த்து கடந்த தேர்தலில்போட்டியிட்டுத் தோற்றவர் முன்னாள் அமைச்சர் கந்தசாமி. இவர் இப்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில்உள்ளார்.

கடந்த தேர்தலில் இருந்தே இரு தரப்பினருக்கும் இடையே பகை இருந்து வந்தது.

இந் நிலையில் ராஜவேலுவின் சதோதரரின் மகன் கந்தசாமியின் உறவினரின் மகளைக் காதலித்து வந்துள்ளார். சிலதினங்களுக்கு முன் இருவரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.

இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் எழுந்தது. ராஜவேலுவின் ஆட்கள் கந்தசாமியின்ஆட்களை தாக்கினர். இது தொடர்பாக கந்தசாமியின் ஆட்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அவர்கள் காவல் நிலையத்தில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது அவர்களை ராஜவேலுவின் ஆட்கள்வழி மறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். பட்டாக் கத்திகள், அரிவாள்களால் அவர்கள் திடீரென தாக்கியதில்கந்தசாமியின் ஆட்கள் நிலை குலைந்தனர்.

அவர்கள் தப்பியோடினர். ஆனால், அவர்களை ராஜவேலுவின் ஆட்கள் விரட்டிச் சென்று தாக்கினர். இதில்கந்தசாமியின் ஆதரவாளரான த.மா.கா. தொண்டர் ஒருவர் நடுரோட்டில் கத்திக் குத்து விழுந்து இறந்தார்.

இச் சம்பவத்தால் பாகூர் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவுகிறது. பழி வாங்கும் வகையில் மீண்டும் தாக்குதல்நடக்கலாம் என்று கருதப்படுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+