தமிழ் தேசிய மீட்சிப் படை, தமிழ்நாடு விடுதலைப் படைக்கு மத்திய அரசு தடை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழ் தேசிய மீட்சிப் படை, தமிழ்நாடு விடுதலைப் படை ஆகிய தீவிரவாத அமைப்புகளை மத்திய அரசு தடைசெய்துள்ளது.

பொடோ சட்டத்தின் கீழ் இந்த அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலின்போது தான் இந்தப் படைகளின் விவரம் வெளியில் வந்தது. சந்தனக் கடத்தல்வீரப்பனுடன் சேர்ந்து இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காட்டுப் பகுதியில் இயங்கி வரும் விவரம்தெரியவந்தது.

ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க வேண்டும், சேலம், திருச்சிமத்திய சிறைகளில் உள்ள சத்யமூர்த்தி, மணிகண்டன், முத்துக்குமார், வெங்கடேசன், பொன்னிவளவன் ஆகிய 5தமிழ் தேசிய விடுதலைப் படை தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வீரப்பன்முன் வைத்தபோது தமிழகம் அதிர்ந்தது.

காட்டுக்குள் வீரப்பனுடன் தமிழ் தேசியவாத தீவிரவாதிகளும் இருப்பது தெரியவந்தது. இவர்கள் காட்டுக்குள்தனித் தமிழ்நாடு கொடியையும் ஏற்றியுள்ளதாகவும் கூறப்பட்டது.

வீரப்பனின் எந்தக் கோரிக்கையையும் தமிழக, கர்நாடக அரசுகள் நிறைவேற்றவில்லை.

பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் எடுத்த முயற்சியால் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார்.

அன்று முதல் இந்த இரு தமிழ் தேசியவாத அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்தது.

சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் ஜெயலலிதா இந்த இரு இயக்கங்களுக்கும் தடை விதிக்குமாறு பிரதமர்வாஜ்பாயிடமும், உள்துறை அமைச்சர் அத்வானியிடமும் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து இந்த இரு அமைப்புகளையும் பொடோ சட்டத்தின் கீழ் தடை விதித்து உள்துறை அமைச்சகம் இன்றுஉத்தரவு பிறப்பித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+