குடிநீர் வினியோகம் பாதிப்பு: மதுரை, ஈரோடு, திண்டுக்கல்லில் பெண்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய இடங்களில் கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம்பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொது மக்கள் காலி பானைகளுடன் சாலை மறியல்களில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர்.

திண்டுக்கல்லில் கடந்த 4 வாரங்களாகவே தண்ணீரை நகராட்சி முறையாக வினியோகிக்கவில்லை. குடிநீர்குழாய்களில் தண்ணீர் வராத பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. அதுவும்நிறுத்தப்பட்டுவிட்டதாால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல ஈரோட்டில் முறையான குடிநீர் வினியோகம் இல்லாததால் அதிமுகவினரே போராட்டம் நடத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கைஎடுக்கப்படவில்லை என்று கூறி ஈரோட்டில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் இன்று மதுரையிலும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். மதுரை மாநகராட்சியும் குடிநீர்வினியோகத்தில் அலட்சியமாக இருந்து வருவதால் இன்று பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில்ஈடுபட்டனர்.

ஆரப்பாளையம் பகுதியில் உள்ள குடிநீர் ஏற்றும் மையத்தை முற்றுகைப் போராட்டம் நடந்தது. 2 மணி நேரம்இந்தப் போராட்டம் நடந்தது. இதையடுத்து கரிமேடு காவல் நிலைய போலீசாரும், அதிகாரிகளும் விரைந்து வந்துபெண்களுடன் பேச்சு நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+