வைகோவை கைது செய்ய காங்கிரஸ், தமாகா ஆதரவு
சென்னை:
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசி வரும் மதிமுக பொதுச் செயலாளரான வைகோவுக்கு எதிரானஎடுக்கப்படும் தமிழக அரசின் நடவடிக்கைகளை ஆதரிப்போம் என்று தமிழக காங்கிரசும் தமிழ் மாநில காங்கிரசும்கூறியுள்ளன.
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் விருதுநகரில் நிருபர்களிடம் கூறுகையில்,
பொதுக்கூட்டங்கள் மட்டுமில்லாமல் திருமண நிகழ்ச்சிகளிலும் கூட புலிகளை ஆதரித்து வைகோ பேசி வருகிறார்.
எனவே வைகோவை ஏற்கனவே தமிழக அரசு கைது செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் துணைப்பிரதமர் அத்வானிக்குக் கடிதம் எழுதி காலத்தை வீணாக்குவது தேவையற்றது.
வைகோவைக் கைது செய்து விட்டு அது தொடர்பான தகவலை மத்திய அரசுக்குத் தமிழக அரசுதெரிவித்திருக்கலாம்.
அமெரிக்காவில் வைகோ இருக்கும் போது தமிழக முதல்வர் ஜெயலலிதா இவ்வாறு புகார் கூறியிருப்பது அவரைப்பயமுறுத்தவா அல்லது வேறு ஏதாவது ஆதாயத்திற்காகவா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார் இளங்கோவன்.
வாழப்பாடி அறிக்கை:
இதற்கிடையே தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் வாழப்பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புலிகளுக்கு ஆதரவாகப் பேசி வருபவர்கள் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று ஜெயலலிதாஎச்சரித்துள்ளது பாராட்டுக்குரியது.
இந்தியாவில் இருந்து கொண்டு புலிகளுக்கு வைகோ ஆதரவு தெரிவிப்பதை விட அவர் நேரடியாகயாழ்ப்பாணத்திற்கே சென்று விடுவது நல்லது.
வைகோ, ராமதாஸ் போன்றவர்கள் தொடர்ந்து புலிகளுக்கு ஆதரவு கொடுத்தால் அவர்களுடைய கட்சிகளையும்தடை செய்ய வேண்டும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் வாழப்பாடி.
தமாகா ஆதரவு:
இந்நிலையில் புலிகளை ஆதரிக்கும் வைகோவைக் கைது செய்வதில் தவறேதும் இல்லை என்று தமாகாதெரிவித்துள்ளது.
தமாகா தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் அக்கட்சியின் சட்டசபைத் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம்ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முக்கியக்குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த இயத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவும் தெரிந்தும் புலிகளை ஆதரித்து இந்தியாவில் வைத்தே வைகோ பேசி வருகிறார். இதை வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று மத்திய அரசுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
நாட்டின் சட்ட-ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கும் உள்ளது. ஜெயலலிதாவின் கடிதத்துக்குமுக்கியத்துவம் கொடுத்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுகவில் பிளவு ஏற்பட்டு மதிமுக உருவானதற்குக் காரணமே புலிகளின் பின்னணி தான் என்பதில் யாருக்கும்சந்தேகமில்லை.
வைகோவைக் கைது செய்யும் விஷயத்தில் தமிழக அரசு அரசியல் நோக்கோடு செயல்படவில்லை என்றேஎங்களுக்குத் தோன்றுகிறது என்று வாசனும் எஸ்.ஆர்.பியும் கூறினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications