சென்னையில் நடு ரோட்டில் வழக்கறிஞர் சுட்டுக் கொலை: போதை கடத்தல் கைதிகளுக்கு தொடர்பா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நேற்று இரவு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரை மர்ம மனிதன் ஒருவன் நடு ரோட்டில் சுட்டுக்கொன்று விட்டு தப்பி விட்டான்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிபவர் மதனகோபால் (45). ஆலந்தூரில் வசித்து வரும்மதனகோபால், தன் மனைவி மற்றும் மகளுடன் பொருட்கள் வாங்குவதற்காக நேற்று இரவு பாண்டி பஜார்பகுதிக்குக் காரில் வந்தார்.

வாங்கிய பொருட்களைக் காரில் வைப்பதற்காக அதை நோக்கி வந்தபோது, திடீரென்று மதனகோபாலுக்குப்பின்னால் வந்த ஒருவன் அவருடைய பின்னந் தலையில் துப்பாக்கியால் சுட்டான்.

தலையில் குண்டு பாய்ந்த மதனகோபால் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். தங்கள் கண்ணெதிரிலேயேமதனகோபால் சுடப்பட்டதைப் பார்த்த அவருடைய மனைவி சுகுணாவும் மகள் ஆர்த்தியும் அதிர்ச்சியடைந்துகூக்குரல் எழுப்பினர்.

அதற்குள் அந்த மர்ம மனிதன் தான் வந்திருந்த பைக்கில் ஏறித் தப்பிச் சென்று விட்டான்.

இதைத் தொடர்ந்து மக்கள் நடமாட்டம் நிறைந்த பாண்டி பஜார் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பாண்டி பஜார்போலீஸ் நிலையத்துக்கு வெகு அருகில் தான் இந்தச் சம்பவம் நேற்றிரவு 8.30 மணிக்கு நிகழ்ந்தது.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தன் கணவரைக் காப்பாற்றுவதற்கு உதவி செய்யக் கோரி சுகுணா அந்தப்போலீஸ் நிலையத்திற்குச் சென்றார். ஆனால் சம்பவம் நடந்த இடம் மாம்பலம் போலீஸ் நிலைய எல்லைக்குஉட்பட்டது என்று கூறி அவர்கள் உதவ மறுத்து விட்டனர்.

இதையடுத்து சுகுணாவும் ஆர்த்தியும் ரத்த வெள்ளத்தில் கிடந்த மதனகோபாலை உடனடியாக ஒரு ஆட்டோவில்ஏற்றிக் கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

ஆனால் அதற்குள் ஏராளமான ரத்தம் வெளியேறியதால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயேமதனகோபால் பரிதாபமாக உயிரிழந்தார்.

மக்கள் நடமாட்டம் மிகுந்துள்ள பகுதியில் இந்தக் கொலைச் சம்பவம் நடந்திருப்பதால் பாண்டி பஜார் பகுதியில்நேற்றிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போதை கடத்தல் கைதிகளுக்கு தொடர்பு?

இதையடுத்து கொலையாளிகளை மாம்பலம் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மதனகோபால் ஒரு பிரபலமான கிரிமினல் வழக்கறிஞர் ஆவார். போதைப் பொருட்கள் கடத்தல் வழக்குகளில்அதிக அளவில் ஆஜராகி குற்றவாளிகளுக்கு அவர் தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளார்.

பாலகிருஷ்ணன் மற்றும் ராஜரத்தினம் ஆகிய சகோதரர்கள் இருவரும் போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களை ஜாமீனில் எடுக்குமாறு அவர்கள் மதனகோபாலைக் கேட்டிருந்தனர்.ஆனால் அவர்களை ஜாமீனில் எடுக்க அவர் மறுத்து விட்டார்.

இதையடுத்து இந்த சகோதரர்கள் தான் மதனகோபாலை ஆட்கள் வைத்துக் கொன்றிருப்பார்கள் என்று போலீசார்சந்தேகித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அந்த சகோதரர்களின் மற்றொரு சகோதரரான செல்வராஜ் என்பவரைப் பிடித்துப் போலீசார்தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களின் மற்றொரு சகோதரியான விஜயலட்சுமி என்பவரை மதனகோபால் 2வது திருமணம் செய்துள்ளதாகக்கூறப்படுகிறது. அவர் கொலை செய்யப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம் என்றும் தெரிகிறது.

நாளை வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு:

இதற்கிடையே வழக்கறிஞர் மதனகோபால் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்றவழக்கறிஞர்கள் நாளை நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

கொலையாளிகளை போலீசார் உடனடியாகக் கண்டுபிடிக்கவில்லை என்றால் அடுத்தகட்டப் போராட்டம்நடத்துவது குறித்து வழக்கறிஞர்கள் சங்கப் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+