மதிமுகவையே தடை செய்ய ஜெ. முடிவு?
சென்னை:
விடுதலைப்புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்போம் என்று மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவுசெய்துள்ளதையடுத்து அந்தக் கட்சியையே தமிழகத்தில் தடை செய்வது குறித்து முதல்வர் ஜெயலலிதாஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் நடந்த மதிமுகவின் அவசர செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியில் உள்ள அனைவருமே அதன்பொதுச் செயலாளரான வைகோவின் பாதையிலேயே செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது.
அவரைப் போலவே தொடர்ந்து புலிகளை ஆதரிக்கவும் முடிவு செய்து இந்தக் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. வைகோ கைதை எதிர்கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் தீர்மானம் நிறைவேறியது.
மதிமுகவினரின் இந்தத் தீர்மானம் ஜெயலலிதாவின் கோபத்தை மேலும் தூண்டியுள்ளது.
பொடா சட்டத்தைக் கொண்டு வந்த மத்திய அரசில் உள்ள மதிமுக அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் போதே புலிகளுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால் தமிழக அரசு கொதித்துப்போயுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக மதிமுகவையே பொடா சட்டத்தின் கீழ் தடை செய்ய அரசு முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காகச் சட்ட வல்லுநர்களுடன் ஜெயலலிதா தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
வைகோ வரும் 12ம் தேதி அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன் நிச்சயம் கைது செய்யப்படுவார் என்றுதெரிகிறது. இந்தக் கைதுக்குப் பின்னர் மதிமுகவைத் தடை செய்வது குறித்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்றுதெரிகிறது.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதை ஆதரிக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் மத்திய அரசு நிச்சயம்தடுமாறும்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications