காங்கிரசுடன் இணைப்பு: தமாகா பொதுக்குழுவில் நாளை தீர்மானம்
சென்னை:
காங்கிரஸ் கட்சியுடன் தங்கள் கட்சியை இணைப்பது குறித்து நாளை சென்னையில் கூடவுள்ள தமாகாபொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
கடந்த பல மாத முயற்சிகளுக்குப் பிறகு வரும் ஆகஸ்டு 14ம் தேதி காங்கிரசுடன் தமாகாவை இணைப்பதென்றுமுடிவு செய்யப்பட்டது. மதுரையில் இந்த இணைப்பு விழா மிகவும் பிரம்மாண்டமான முறையில்நடத்தப்படவுள்ளது.
முதலில் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி இணைப்பு விழாவைநடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அன்று தான் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பதால்இணைப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் ஆகஸ்டு 1 மற்றும் 12 ஆகிய தேதிகளுக்கும் இணைப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் 12ம் தேதிதுணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் இறுதியாக ஆகஸ்டு 14ம் தேதி இணைப்பு விழா நடைபெறும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை தமாகாவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் தங்கள்கட்சியை இணைப்பது குறித்த தீர்மானம் நாளைய கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.
காமராஜர் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக நடத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளன.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications