தூத்துக்குடியில் வெடிகுண்டு வைத்திருந்த 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வெடிகுண்டுகள் வைத்திருந்த 2 பெண்கள் உள்பட 5 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
சமீப காலத்தில் தூத்துக்குடியில் வெடிகுண்டுகள் சர்வ சாதாரணமாகப் புழங்கி வருகின்றன.
அங்கு ரவுடிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவர்களுக்கிடையே கோஷ்டி மோதலும்பெருகிக் கொண்டு வருகிறது. இதனால் அவர்கள் அதிக அளவில் வெடிகுண்டுகளையும் தயாரித்து வைத்துக்கொள்கின்றனர்.
கோஷ்டி மோதல் ஏற்படும் போது படு கூலாக ஒருவர் மீது ஒருவர் வெடிகுண்டுகளை வீசித் தாக்கிக் கொள்கின்றனர்.
சமீபத்தில் அந்தோணியப்பா மற்றும் ஜெயக்குமார் ஆகிய இரண்டு ரவுடிகள் தலைமையிலான கோஷ்டிகள்பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் மாரிமுத்து என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் வீடுகளில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகப்போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து மினி சகாயபுரத்திலுள்ள சில வீடுகளில் போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 2டின் வெடிகுண்டுகள், 6 பெட்ரோல் குண்டுகள் மற்றும் 3 நாட்டு வெடிகுண்டுகள் ஆகியவை இருப்பது தெரியவந்தது.
அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார், ஜோஸ்மின் (72) மற்றும் ராணி (33), ரவி (34), கோபால் (33) மற்றும்ஜெகன் (23) ஆகியோரைக் கைது செய்தனர்.
இது தொடர்பாக மேலும் ஐந்து பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications