ராமேஸ்வரம் கடலில் கடற்படை- கொள்ளையர்கள் துப்பாக்கி சண்டை
ராமநாதபுரம்:
தனுஷ்கோடி அருகே தமிழக மீனவர்களைத் தாக்க முயன்ற கடற்கொள்ளையர்களை இந்திய கடற்படை தாக்கியது. இதையடுத்துஇரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது.
2 படகுகளில் தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 14 தமிழக மீனவர்களை கடற் கொள்ளையர்கள் சுற்றிவளைத்தனர். அவர்கள் இலங்கை கடற்படையின் சீருடையை அணிந்திருந்தனர். ஆனால், அவர்கள் கொள்ளையர்கள் என்பதைபுரிந்து கொண்ட மீனவர்கள் அவர்களிடம் இருந்து தப்பி கரையை நோக்கி வேகமாக படகுகளை செலுத்தினர்.
ஆனால், அவர்களை அந்தக் கொள்ளையர்கள் தொடர்ந்து விரட்டிக் கொண்டு வந்தனர். இந்திய கடல் எல்லைக்குள்ளும் அந்தக்கொள்ளையர்கள் புகுந்தனர்.
அரிச்சல்முனை என்ற இடத்தில் மீனவர்களின் படகுகளை நோக்கி அவர்கள் சுட்டனர். இதையடுத்து அந்தப் பகுதியில்கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோரக் காவல் படையினர் அந்தக் கொள்ளையர்களை நோக்கி திருப்பிச் சுட்டனர்.
இதையடுத்து கொள்ளையர்கள் பதிலுக்கு இந்திய கடலோரக் காவல் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்தியப் படையினர்தீவிர பதிலடித் தாக்குதல் நடத்தியதையடுத்து அவர்கள் தப்பி இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்துவிட்டனர்.
இதையடுத்து மீனவர்கள் 14 பேரையும் பாதுகாப்புடன் கரைக்கு அழைத்து வந்த கடலோரக் காவல் படையினர்.போலீசாரிடம்ஒப்படைத்தனர்.
ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் ஏவுகணை விஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இன்று தனது சொந்த ஊரான ராமேஸ்வரம்வந்தார். அவரது வருகையாைெட்டி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. கடலிலும் கண்காணிப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல் படைக் கப்பல் தான் இந்த மீனவர்களைக் காப்பாற்றியுள்ளது.
இலங்கை கடற்படையினரா?:
முன்னதாக இந்திய கடலோரக் காவல் படையினருக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே கடலில் துப்பாக்கிச் சண்டைநடந்ததாக சில மீனவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், இதை போலீசார் மறுத்தனர். இலங்கை கடற்படையினரின் உடைகளை அணிந்து வந்த கொள்ளையர்களுக்கும் இந்தியப்படையினருக்கும் இடையில் தான் சண்டை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications