புதிய வெளியுறவு அமைச்சர் சின்ஹா இலங்கை பயணம்
டெல்லி:
இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா இன்று காலை தன்னுடைய மாலத்தீவுகள்மற்றும் இலங்கைப் பயணத்தைத் துவக்கினார்.
கடந்த ஜூலை 1ம் தேதி மத்திய அமைச்சரவையில் ஏற்பட்ட பெரும் மாறுதல்களின் போது வெளியுறவுத்துறைஅமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங்கும் நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவும் தங்களுடைய பதவிகளைஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டனர்.
இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பதவியேற்ற பின் முதல் முறையாக இன்று சின்ஹா தன்னுடையவெளிநாட்டுப் பயணத்தைத் துவக்கினார். மாலத் தீவுகளுக்கும் இலங்கைக்கும் மூன்று நாள் பயணமாக இன்றுகாலை டெல்லியிலிருந்து அவர் கிளம்பினார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பொருளாதார, வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை மேம்படுத்தும்பொருட்டே இப்பயணத்தை தான் மேற்கொண்டிருப்பதாக டெல்லி விமான நிலையத்தில் சின்ஹா தெரிவித்தார்.
இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகள் குறித்து உடனுக்குடன் அந்நாடு இந்தியாவுக்குத் தகவல்களைத்தெரிவித்து வருவதாகவும் இந்த அமைதி முயற்சிகளை இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருவதாகவும் சின்ஹாகூறினார்.
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறைஅமைச்சர் திரோன் பெர்னாண்டோ ஆகியோரைச் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார் சின்ஹா.
கடந்த மாதம் தான் ரணில் இந்தியாவிற்கு வந்துசென்றார். இந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே சின்ஹா அந்நாட்டுக்குப்பயணம் செல்வது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மாலத்தீவுகளுக்குச் செல்லும் சின்ஹா அந்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல்,பொருளாதாரம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவுகளை மேம்படுத்தும் பொருட்டுஅந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications